முந்தய பக்கம்

சிவகாசியில் தோழர் எஸ்.மாடசாமி படத்திறப்பு

6 Oct 2026, 8:53 pm
சிவகாசியில் தோழர் எஸ்.மாடசாமி படத்திறப்பு

சிவகாசியில் தோழர் எஸ்.மாடசாமி படத்திறப்பு

சிவகாசி, அக்.6-விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மறைந்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எஸ்.மாடசாமியின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.சிவகாசி வட்டார மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகப் பணியாற் றிய எஸ்.மாடசாமி, கட்டுமானம், அச்சு உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலாளர்களைத் திரட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர். வயது மூப்பு காரணமாக அவர் இயற்கை எய்தினார். தனது உடலை விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்க வேண்டும் என அவர் முன்கூட்டியே தெரிவித்திருந்ததையடுத்து, அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சிக்கு மாநகரச் செயலாளர் ஆர்.சுரேஸ்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.என்.தேவா, எம்.மகாலட்சுமி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.

மாநில செயற்குழு உறுப்பினர் கே.அர்ஜூனன், எஸ்.மாடசாமியின் உருவப் படத்தைத் திறந்து வைத்துசிறப்புரையாற்றினார். மாநகரக் குழு உறுப்பினர் என்.முத்துராஜ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.முத்துவேலு, எம்.சி.பாண்டியன், பி.பாண்டி, பி.பாலசுப்பிரமணியன், எம்.கணேசன், மூத்த தோழர்கள் பி.பால்ராஜா, ராம்தாஸ் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram