தேசிய அணுவாற்றல் ஊழியர் சம்மேளனத்தின் தலைவராக கல்பாக்கம் மு.சிவஞான சம்பந்தம் தேர்வு
14 Jul 2026, 9:53 pm
<p><strong>தேசிய அணுவாற்றல் ஊழியர் சம்மேளனத்தின் தலைவராக கல்பாக்கம் மு.சிவஞான சம்பந்தம் தேர்வு</strong></p><p>சென்னை, ஜூலை 14 - தேசிய அணுவாற்றல் ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவராக கல்பாக்கம் மு.சிவஞான சம்பந்தம் தேர்வு பெற்றார். தேசிய அணுவாற்றல் ஊழியர் சம்மேளனத்தின் 8 ஆவது அகில இந்திய மாநாடு தெலுங்கானா மாநி லத்தின் மனுகுருவில் அண்மையில் நடை பெற்றது. மாநாட்டிற்கு சம்மேளனத்தின் தலைவர் கடம் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேள னத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம். எஸ்.வெங்கடேசன் மாநாட் டைத் தொடங்கி வைத்தார். அணுவாற்றல் ஊழியர் ஓய்வு பெற்றோர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.வி. ஜெயராஜ் வாழ்த்துரை வழங்கினார். செயல் அறிக்கையை சம்மேள னத்தின் பொதுச் செயலா ளர் ஏ.சீதரன் தாக்கல் செய்தார். வரவு-செலவு அறிக் கையை பொருளாளர் அருண் கோலி தாக்கல் செய்தார். நாடு முழுவதும் உள்ள 27 இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் செயல் அறிக்கை மீதும், எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் விவாதித்தனர். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண் டும். மீண்டும் மண்டல வாரி யாக வேலை வாய்ப்புகள் வேண்டும். நிரந்தர வேலை களில் கான்ட்ராக்ட் முறையை ரத்து செய்ய வேண் டும். சி.பி.எப்.லிருந்து ஜி.பி.எப்.க்கு மாற மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும் போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக 15 பேர் கொண்ட புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. சம்மேளனத்தின் தலைவ ராக மு.சிவஞான சம்பந்த மும், பொதுச் செயலாள ராக சி.சுரேஸ் குமாரும், பொருளாளராக எம்.ஏ. விரகளும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.</p>
