தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிவகிரி காவல் நிலைய மரணம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!

26 May 2026, 9:18 pm
சிவகிரி காவல் நிலைய மரணம்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!

சிவகிரி காவல் நிலைய மரணம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!

தென்காசி, மே 26- தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலையத்திற்குள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த விவசாயி அந்தோணிராஜ் (63) தற் கொலை செய்து கொண்ட சம்பவத்தைக் கண்டித்து, புதன்கிழமை (மே 27) சிவகிரி யில் சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தளவாய்புரத்தைச் சேர்ந்த அந்தோணி ராஜுக்கும் அவரது அண்டை வீட்டாரான பசுபதிக்கும் இடையே வீட்டுமனை தொடர் பாக நிலத் தகராறு இருந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில், கடந்த மே 15 அன்று சிவகிரி காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற அந்தோணிராஜைக் காவல் ஆய்வாளர் முரளிதரன் ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்கி, மிரட்டிய தாகக் கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்ச லுக்கு ஆளான அவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

தொடர்ந்து மே 21 அன்று மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, காவல் நிலையத்திற்குள்ளேயே பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தி தற்கொலைக்கு முயன்ற அந்தோணிராஜ், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மே 24 அன்று உயிரிழந்தார்.

இச்சம்பவத்திற்குக் காரணமான காவல் ஆய்வாளர் முரளிதரன், எழுத்தர் கனகராஜ், காவலர் முத்துக் கண்ணன் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணமும் அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இந்தப் போராட்டத்தில் முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.