சிவகிரி போலீசார் தாக்கியதால் மனமுடைந்த விவசாயி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை காவல் ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்
26 May 2026, 10:01 pm

சிவகிரி போலீசார் தாக்கியதால் மனமுடைந்த விவசாயி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை காவல் ஆய்வாளர் உட்பட 3 போலீசார் சஸ்பெண்ட்

தென்காசி, மே 26- சிவகிரியில் போலீசார் தாக்கிய தால் மனமுடைந்த விவசாயி அந்தோணி ராஜ், காவல் நிலைய வாசலில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா, ராயகிரி அருகே தள வாய்புரம் கிராமத்தைச் சேர்ந்த வேலு என்பவர் மகன் அந்தோணி ராஜ் (வயது 65). விவசாயியான இவர் தனது நிலத்தில் சொந்தமாக வீடு கட்டி வந்துள்ளார்.

அந்தோணி ராஜ் வீடு கட்டக்கூடிய இடம் தன்னுடைய இடம் என கூறி பக்கத்து வீட்டு பேச்சிபாண்டி மனைவி பசுபதி சிவகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார். காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், இருவரையும் 15.05.2026 அன்று அழைத்து விசா ரணை நடத்தினார். விசாரணை யின்போது அந்தோணிராஜை காவல் ஆய்வாளர் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார்.

மாலை 4 மணி வரை காவல் நிலை யத்தில் அந்தோணிராஜூம் அவரது 3 வயது பேரனும் இருந்துள்ள னர்.

பின்னர் அந்தோணி ராஜிடம் முகவரியை வாங்கிக்கொண்டு, அழைக்கும் போது காவல் நிலை யத்திற்கு வர வேண்டும் எனக் கூறி போலீசார் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இத னால் மனமுடைந்த விவசாயி அந்தோணிராஜ், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாள ருக்கு 16.5.2026 அன்று ரெஜிஸ்டர் தபால் மூலம் ஆய்வாளர் முரளி தரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்திருக்கிறார்.

மாவட்ட காவல் கண்காணிப்பா ளருக்கு தபால் கிடைத்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, கோபம டைந்த ஆய்வாளர் முரளிதரன், அந்தோணி ராஜை மே 21 அன்று காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி, சரமாரியாக தாக்கி யுள்ளார்.

இதனால் மேலும் மன முடைந்த அந்தோணி ராஜ் காவல் நிலைய வாசலில் வைத்து, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து, மயங்கி கீழே விழுந்துள்ளார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினர் தென்காசி தலைமை மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கிருந்து திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மூன்று நாட்க ளுக்குப் பின்பு சிகிச்சை பல னின்றி அந்தோணி ராஜ் மே 24 ஆம் தேதி உயிரிழந்தார்

. காவல்நிலையத்தை முற்றுகை இந்நிலையில அந்தோணி ராஜின் மனைவி செல்லம்மாள், தனது கணவரை போலீசார் அவ தூறாகப் பேசி தாக்கியதால் அவர் மனமுடைந்து அவமானத்தால் விஷம் குடித்தார்.

எனவே இது சம்பந்தப்பட்ட காவல் ஆய்வா ளர் முரளிதரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அது வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என்று திட்டவட்ட மாகத் தெரிவித்தார். மேலும் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் சிவகிரி காவல் நிலை யத்தை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பு மற்றும் பதற்றமான சூழலை ஏற்படுத்த அங்குவந்த புளியங்குடி டி.எஸ்.பி. மதன் போராட்டத்தில் ஈடுபட்ட அந்தோணி ராஜ் மகன் இசக்கிதுரை மற்றும் அவரது உறவினர்கள் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனா லும் போராட்டத்தை அவர்கள் கைவிடவில்லை.

இதையடுத்து நெல்லை போலீஸ் எஸ்.பி. பிரசன்ன குமார் இவ்விவகாரம் தொடர்பாக சிவகிரி காவல்நிலைய போலீசாரிடம் தனித்தனியே விசாரணையை மேற்கொண்டார். தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ள சி.சி. டி.வி. கேமராவையும் ஆய்வு செய் தார்

இடப்பிரச்சனையில் புகார் செய்த பசுபதியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இந்த சம்பவத்தில் காவல் ஆய்வாளர் உள்பட 2 காவலர்கள் மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டி.ஐ.ஜி.யின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் முரளிதரன் ,காவ லர்கள் கனகராஜ், முத்து ஆகி யோரை பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்தனர்.