திருச்சி விரைவு செய்திகள்
13 May 2026, 12:14 am

நில உடமைகளை பதிவு செய்ய சிவகங்கை ஆட்சியர் அழைப்பு

சிவகங்கை, மே 12- பிரதமரின் கவுரவ நிதித்தொகை பெறும் விவசாயி கள், நில உடைமைகளை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரி வித்துள்ளார். வேளாண்மைத்துறை அலுவலர்கள் கிராமங்கள் தோறும் சென்று பிரதமரின் கௌரவ நிதித் தொகை பெறும் விவசாயிகளை சந்தித்து நில உடைமையை பதிவு செய்யாத விவசாயிகளை பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் 4,586 விவசாயிகள் கெளரவ நிதி பெற்றும் நில உடைமைகளை பதிவு செய்யாமல் உள்ளனர். இந்த உழவர் அடையாள அட்டை மூலம் மானியங்கள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஒற்றை சாளர முறையில் பெறலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் உள்ளது. இ-சேவை மையத்தினையும் தொடர்பு கொள்ளலாம் அல்லது வேளாண்மைத்துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். எனவே, பிரதம ரின் கௌரவ நிதித்தொகை பெறும் விவசாயிகள், நில உடைமைகளை பதிவு செய்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரி வித்துள்ளார்.

இராஜபாளையத்தில் மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழப்பு

இராஜபாளையம், மே 12- இராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மூதாட்டி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ப வரின் மனைவி பொன்னுலட்சுமி (60). கணவர் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் சென்று வழிபட்டு விட்டு மீண்டும் ஊருக்கு திரும்புவதற்காக இராஜ பாளையம் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தபோது, திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு காவல் நிலை யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தவறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருவில்லிபுத்தூர், மே 12- திருவில்லிபுத்தூர் நகரில் சர்ச் படிக்கட்டில் ஏறும்போது நிலை தடுமாறி விழுந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சந்தைப்பேட்டை தெருவைச் சேர்ந்த லூர்து மேரி (83) என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மே 11ஆம் தேதி அருகிலுள்ள அந்தோணியார் சர்ச் சென்றி ருந்தார். அப்போது சர்ச் படிக்கட்டில் ஏறிக்கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்ததில், இடது பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படு கிறது. உடனடியாக அவர் திருவில்லிபுத்தூர் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச் சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, தொடர்ந்து மேம்பட்ட சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த லூர்து மேரி மே 12ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் நிக்சன் அளித்த புகாரின் பேரில் திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

தடை செய்யப்பட்ட பாலித்தீன், புகையிலை பொருட்கள் விற்பனை இராஜபாளையத்தில் அபராதம் விதிப்பு

இராஜபாளையம், மே 12- இராஜபாளையம் நக ராட்சிப் பகுதிகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள் மற்றும் புகையி லைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதை தொட ர்ந்து அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு அப ராதம் விதித்தனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு மற்றும் நகராட்சி ஆணையாளர் அறி வுறுத்தலின் பேரில், நகர நல அலுவலர் ராஜ்குமார் தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் இணைந்து காமராஜ் நகர், ரயில்வே பீடர் ரோடு மற்றும் டிபி மில்ஸ் ரோடு பகுதிகளில் செவ் வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், ஒரு முறை பயன்படுத்தப்படும் பாலித்தீன் பைகள், பிளா ஸ்டிக் கப்புகள், தடை செய் யப்பட்ட நெகிழிப் பொருட் கள் விற்பனை செய்யப்பட் டதா என கண்காணிக்கப்பட் டது. ஆய்வின்போது சுமார் 15 கிலோ தடை செய்யப் பட்ட நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு ரூ. 3,000 அபராதம் விதிக்கப் பட்டது. மேலும், பள்ளிகள் அருகே புகைபிடிக்க அனு மதித்தது, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக நான்கு கடைக்காரர்களுக்கு ரூ. 1,400 அபராதம் விதிக்கப் பட்டது. அதேபோல், குட்கா, பான் மசாலா, பான் பராக் போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என 27 கடைகளில் தனியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது, கடைகளின் முன் புறத்தில் புகையிலை விளம்பரங்கள் வைக்கக் கூடாது, “புகைபிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பு கட்டாயம் வைக்க வேண்டும் என வியா பாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோர் மீது உடனடி அபராதம் விதிப்ப துடன், பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டு நீதி மன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்ச ரிக்கை விடுக்கப்பட்டது.