சிவகங்கை அருகே டாஸ்மாக் கடையை எதிர்த்து டி. லதா எம்எல்ஏ தலைமையில் போராட்டம்!
14 Jul 2026, 9:05 pm

சிவகங்கை அருகே டாஸ்மாக் கடையை எதிர்த்து டி. லதா எம்எல்ஏ தலைமையில் போராட்டம்!

சிவகங்கை, ஜூலை 14 - சிவகங்கை மாவட்டம், திருப்பத் தூர் அருகே திருக்களாப்பட்டியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் மதுபானக் கடையை (எண்:7720) அகற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி. லதா தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் கிராம பொது மக்கள் இணைந்து நடத்திய இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத் தாய், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

. இந்த டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்கள் மதுப் பழக்கத் திற்கு ஆளாகும் அபாயம் அதிகரித்து ள்ளதாகவும், பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் பெண் களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவு வதாகவும் தலைவர்கள் குற்றம் சாட்டினர்.

கடந்த ஜூன் 4 அன்று பள்ளி திறந்த முதல் நாளில், காரையூரைச் சேர்ந்த 15 வயது மாணவர் அஸ்வின் மது போதையில் இருந்த நண்பர்களால் கொடூரமாகக் கொலை செய்யப் பட்ட சம்பவத்திற்கும் இந்த டாஸ்மாக் கடையின் செயல்பாடே மறைமுகக் காரணம் என குற்றம் சாட்டி, உடனடியாக கடையை மூட வேண்டும் என வலியுறுத்தினர். திருப்பத்தூர் வட்டாட்சியர் மாணிக்க வாசகம் மற்றும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் பாத்திமா சகாய ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, 3 மாதங்களுக்குள் கடையை இடமாற்றம் செய்வதாக உறுதி யளித்தனர்.

ஆனால், அதிகாரிகளின் உறுதி மொழியை ஏற்க மறுத்த கிராம மக்கள், கடை முழுமையாக அகற்றப் படும் வரை போராட்டத்தைக் கைவிடமாட்டோம் என அறிவித்து டாஸ்மாக் கடை முன்பு கூடாரம் அமைத்து, சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதன் பின்னர் ஒரு மாதத்தில் கடை அகற்றப்படும் என அதி காரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட் டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

முன்னதாக இந்தப் போராட்டத் தில் மாதர் சங்க மாவட்டச் செய லாளர் சாந்தி, சண்முகப்பிரியா, ரோகிணி, வாலிபர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் டி. செல்வா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்க பூபதி, அய்யம்பாண்டி, ஆறுமுகம், சிபிஎம் தாலுகா செயலாளர் முருகே சன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மெய்யப்பன், பாலு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி மீனாம்பாள் மற்றும் மாணவ, மாணவிகள், கிராம பொதுமக்கள் 300 பேருக்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்ற னர்.