தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிரம்பி வழியும் செப்டிக் தொட்டி தொற்றுநோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்

13 Jun 2026, 10:14 pm
சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிரம்பி வழியும் செப்டிக் தொட்டி தொற்றுநோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்
<p><strong>சிவகங்கை வட்டாட்சியர் அலுவலகத்தில் நிரம்பி வழியும் செப்டிக் தொட்டி தொற்றுநோய் பரவும் அபாயத்தால் பொதுமக்கள் அச்சம்</strong></p><p>சிவகங்கை, ஜூன் 13- சிவகங்கை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள செப் டிக் தொட்டி நிரம்பி வழிவ தால், சுகாதாரச் சீர்கேடு ஏற் பட்டுள்ளதாகவும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண் டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை தாலுகா அலு வலக கட்டிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி அப்போதைய முதல மைச்சர் ஜெ.ஜெயலலிதா வால் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைக்கப்பட் டது. கட்டிடம் பயன்பாட் டிற்கு வந்தது முதல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக செப்டிக் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதன் விளைவாக, தற் போது செப்டிக் தொட்டி நிரம்பி வழிந்து, கழிவுநீர் அரு கிலுள்ள கிளைச் சிறை முன் பகுதி வரை செல்வதாக கூறப்படுகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் மற்றும் அரசு ஊழி யர்கள் வந்து செல்லும் அலு வலக வளாகத்தில் இந்த நிலை நீடிப்பது சுகாதார பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சம் நிலவுகிறது. மேலும், மழைக்காலம் மற்றும் வெயில் காலங்களில் கழிவுநீர் தேங்குவதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் கவலை தெரி விக்கின்றனர். இந்நிலையில், ஜூன் 11 முதல் 13 வரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத் துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற் றும் நலவாழ்வு மையங்க ளில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஒன்றிய சுகாதார ஆய்வுக் குழுவினர், சிவ கங்கை மாவட்டத்தை மலே ரியா இல்லாத மாவட்டமாக அறிவிப்பதற்கான நடவடிக் கைகள் குறித்து மாவட்ட நிர் வாகத்துடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில், வட் டாட்சியர் அலுவலக வளா கத்தில் நிலவும் சுகாதாரச் சீர்கேட்டை மாவட்ட நிர்வா கம் கவனத்தில் கொண்டு, செப்டிக் தொட்டியை உட னடியாக சுத்தம் செய்து தேவையான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என பொதுமக்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.