சிவகங்கையில் மாநில அளவிலான பெண்கள் ஹாக்கி போட்டி
18 Aug 2026, 9:27 pm
<p><strong>சிவகங்கையில் மாநில அளவிலான பெண்கள் ஹாக்கி போட்டி</strong></p><p>சிவகங்கை, ஆக.18-சிவகங்கையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் ஹாக்கி போட்டியில் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சாம்பியன் பட்டம் வென்றது.சிவகங்கை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய திறந்தவெளி மைதானத்தில், யங் சேலஞ் சர்ஸ் ஹாக்கி கிளப் சார்பில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மாநில அளவிலான பெண்கள் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதில்சென்னை, சேலம், மதுரை, விழுப்புரம், திருநெல்வேலி, திருவாரூர், சிவகங்கை உள் ளிட்ட 8 அணிகள் பங்கேற் றன. போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற்றன.இறுதிப் போட்டியில் சென்னை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி வெற்றி பெற்று முதலிடத்தையும், சிவகங்கை வீரமங்கை வேலுநாச்சியார் ஹாக்கி அணி 2-ம் இடத்தையும், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 3-ம் இடத்தையும், திருவாரூர் ஜூவி அணி 4-ம் இடத்தையும் பெற்றன.வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகை, கோப்பைகள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட் டன.</p>
