சிவகங்கையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
12 May 2026, 12:01 am
<p><strong>சிவகங்கையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்</strong></p><p>சிவகங்கை, மே 11- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தலைமை யில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்புத் திட்ட உத வித்தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறு வாழ்வுத்துறை சார்ந்த உதவித்தொகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 215 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களில் தகுதியானவற்றின் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப் பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.ஜி.அரவிந்த், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் தே.ஜெஃபி கிரேசியா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
