திருச்சி விரைவு செய்திகள்
16 May 2026, 10:48 pm

விபத்தை ஏற்படுத்தியவர் விடுவிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

சிவகங்கை, மே 16- சிவகங்கை அம்பேத்கார் சிலை அருகே வெள்ளி யன்று கரும்பு ஏற்றி வந்த டிராக்டர் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற ராமர் உயிரிழந்தார். அவ ரது உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் மற்றும் ஓட்டுநரை போலீசார் விடுவித்ததாக தகவல் பரவி யது. இதனால் ஆத்திரமடைந்த உயிரிழந்த ராமரின் உற வினர்கள் சிவகங்கை நகர் காவல்நிலையத்துக்கு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் நிலையம் முன்புள்ள திருப்பத்தூர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். “விபத்துக்குக் காரணமான ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய வேண்டும்”, “அவரை விடுவித்த போலீஸ் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி கண்டன முழக்கங்கள் எழுப்பினர். போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. தொடர்ந்து, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் போரா ட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

ஓடும்போதே தீப்பற்றி எரிந்து சாம்பலான எலக்ட்ரிக் பைக்

தேனி, மே 16- ஆண்டிபட்டி அருகே ஓடும் போதே எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்து சாம்பலானது. பயணம் செய்தவர் உயிர் தப்பினார். ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டி பகுதி யைச் சேர்ந்தவர் சனிக்கிழமை காலை தனது வேலை நிமித்தமாக ஆண்டிபட்டியிலிருந்து வைகை அணை சாலையில் எலக்ட்ரிக் பைக்கில் சென்று கொண்டி ருந்தார். அவர் வைகை அணை சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே சென்று கொண்டி ருந்தபோது, எதிர்பாராதவிதமாக எலக்ட்ரிக் பைக்கின் உள்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி யது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு, பயத்துடன் சற்று தூரத்திற்கு தள்ளிச் சென்றார். அவர் வண்டியை விட்டு இறங்கிய சில நொடிகளி லேயே, எலக்ட்ரிக் பைக் மளமளவென தீப்பற்றி எரியத் தொடங்கியது. பைக் முற்றிலும் தீப்பந்து போல காட்சி யளித்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக ஓடிவந்து, தீயை அணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் எலக்ட்ரிக் பைக் முற்றிலும் எரிந்து நாசமானது. வண்டியில் இருந்து புகை வந்தவுடனே ஓட்டுநர் சமயோசிதமாக கீழே இறங்கிச் சென்றதால், நல்வாய்ப்பாக எந்தவித காயம் மற்றும் உயிர்ச்சேதமும் இன்றி உயிர் தப்பினார்.

மது போதையில் இறந்து கிடந்த வாலிபர்

தேனி, மே 16- போடியில் மது போதையில் இளைஞர் இறந்து போனது குறித்துப் போலீசார் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். போடி புதூர் வலசைத்துறை சாலையைச் சேர்ந்தவர் பாண்டி மகன் பன்னீர்செல்வம் (39). இவர் கட்டுமானத் தொழிலாளி. திருமணமாகி மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனியாக வசித்து வந்தார். மது போதைக்கு அடிமையானார். மது அருந்துவிட்டு வீட்டிற்கு செல்லாமல் சுற்றி வந்தவர் வெள்ளிக்கிழமை மாலை போடி அம்மா உணவகம் அருகே இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் போடி நகர் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

போடி அருகே பூட்டை உடைத்து நகை, பொருட்கள் கொள்ளை

தேனி, மே 16- போடியில் வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள், பித்தளை பொருட்கள் கொள்ளை போனதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போடி தேவாரம் சாலையில் மாணவிகள் விடுதி அருகே வசிப்பவர் ராஜன் மகன் ஜெயராஜ் (46). இவர் போடி கொட்டகுடி மலை கிராமத்தில் வசித்து தோட்ட வேலை செய்து வருகிறார். போடிக்கு வரும்போது மட்டும் போடியில் உள்ள வீட்டில் தங்குவார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை போடியில் உள்ள வீட்டில் பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குள் வைத்திருந்த தங்கத் தோடு, வெள்ளிக் கொலுசு, பித்தளை குத்துவிளக்குகள், பித்தளை பொங்கல் பானை ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெயராஜ் கொடுத்த புகாரின் பேரில் போடி நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

குறைதீர் முகாம்

திருவில்லிபுத்தூர், மே 16- திருவில்லிபுத்தூர் கோட்டைப்பட்டியில் அமைந் துள்ள தமிழ்நாடு மின்வாரிய செயற்பொறியாளர் அலு வலகத்தில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமிற்கு திருவில்லிபுத்தூர் கோட்டைபட்டி அலு வலக செயற்பொறியாளர் முனியசாமி தலைமை தாங்கி னார். திருவில்லிபுத்தூர் நகர் ஊரகம், வன்னியம்பட்டி வத்திராயிருப்பு பகுதியில் இருந்து மின் நுகர்வோர் குறை களை மனுவாக அளித்தனர். அவைகளை ஆராய்ந்து உடனுக்குடன் தீர்வு வழங்கப் பட்டது. பிள்ளையார் குளம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பகுதிகளில் தெருவிளக்குகள் அமைத்து தரக் கோரி மக்கள் மனுக்கள் அளித்தனர். செயற்பொறியாளர் மனுவை ஆராய்ந்து பிள்ளையார் குளம் ஊராட்சி நிர்வாக தரப்பில் பணம் கட்டினால் உடனடியாக தெருவிளக்குகள் அமை த்து தரப்படும் என்று கூறினார். முகாமில் ஊரக உதவி செயற்பொறியாளர் காலசாமி, நகர் உதவி செயற்பொறி யாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

விருதுநகர், மே 16- விருதுநகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வரு கின்றனர். விருதுநகர் லட்சுமி காலனி யைச் சேர்ந்தவர் சந்திரன்(58). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலை யில், கேரள மாநிலத்திற்கு குடும் பத்துடன் சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ஒரு பவுன் கம்மல் மற்றும் ரூ.27ஆயி ரம் திருடு போனது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து சந்தி ரன் மேற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரைத் தேடி வரு கின்றனர்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நுழைவுத் தேர்வு பயிற்சி

திருவில்லிபுத்தூர், மே 16- விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக் கழ கத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முன்னெடுப்பான ‘திசை’ திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் பயிலும் மாணவர்களுக்கான தங்கு மிடம் மற்றும் உணவு வசதியுடன் கூடிய இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை யை அதிகப்படுத்தவும், தேசிய அளவி லான உயர்கல்வி நிறுவனங்களில் (மருத்து வம், பொறியியல் மற்றும் மத்தியப் பல்க லைக் கழகங்கள்) சேருவதற்குத் தேவை யான நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்யவும் இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. முதற்கட்டப் பயிற்சி மாவட்ட கனிம வள நிதியின் கீழ், 12-ஆம் வகுப்பு முடித்த 310 மாணவர் களுக்கு 1.4.2026 முதல் 30.4.2026 வரை ஒரு மாத கால நீட் மற்றும் க்யூட் பயிற்சி அளிக கப்பட்டது. மே 1 ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை 11-ஆம் வகுப்பு பயிலும் மாண வர்களுக்காக இப்பயிற்சி நடைபெற்று வரு கிறது. இதில் பங்கேற்றுள்ள மாணவர்களின் விபரப்படி, ஜே.இ.இ பயிற்சிக்காக 100 மாணவர்கள் மற்றும் 134 மாணவிகளும், நீட் பயிற்சிக்காக 56 மாணவர்கள் மற்றும் 203 மாணவிகளும், க்யூட் பயிற்சிக்காக 30 மாணவர்கள் மற்றும் 90 மாணவிகளும் என மொத்தம் 186 மாணவர்கள் மற்றும் 427 மாணவிகள் என மொத்தம் 613 பேர் இப்பயிற்சியில் இணைந்துள்ளனர். பயிற்சி முறைகள் இப்பயிற்சி வகுப்புகளில் சிறந்த ஆசி ரியர்களைக் கொண்டு நுழைவுத் தேர்வு களை அணுகும் முறைகள், பாடப்பிரிவு வாரியாக வினாக்களின் தரம் (எளிதா னவை, நடுத்தரமானவை, கடினமானவை) பிரித்து அறியும் திறன், நேர மேலாண்மை மற்றும் விடைகளை எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும் யுக்திகள் ஆகிய நுணுக்கங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள ஏழை-எளிய மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க மாவட்ட நிர்வாகம் மேற்கொண் டுள்ள இந்த முன்னெடுப்பு மாணவர்களி டையே பெரும் வரவேற்பைப் பெற்றுள் ளது.

சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் அரசுப் பணித் தேர்வுக்கு இலவச பயிற்சி

விருதுநகர், மே 16- விருதுநகரில் உள்ள சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் அரசுப் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் வரும் மே 30 முதல் துவங்கப்படுகிறது. இதுகுறித்த சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா, மாவட்டத் தலை வர் எம்.மகாலெட்சுமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: விருதுநகரில் சிஐடியு மாவட்ட நிர்வாகி கள் கூட்டம் நடைபெற்றது. முடிவில் சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெறும் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் துவங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகாசி சாலையில் உள்ள தோழர் ஜே.ஹேமச்சந்திரன் நினைவ கத்தில் இலவச போட்டி தேர்வு பயிற்சி மையத்தை சிஐடியு, அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கமும் இணைந்து நடத்து வது எனவும், வரும் மே 30 முதல் பயிற்சி யை துவங்குவது எனவும் முடிவு எடுக்கப் பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தி பல ஆயிரம் இளை ஞர்களுக்கு அரசுப் பணியை பெற்றுத் தந்த அனுபவம் வாய்ந்த பேராசிரியர் ரவீந்தி ரன், வே.குருசாமி ஆகியோர் பயிற்சி வழங்க உள்ளனர். எனவே, இந்த அரிய வாய்ப்பை அரசு வேலைக்காக காத்திருக்கும் இளை ஞர்களும் இளம் பெண்களும் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம் வரும் மே 18 காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சிஐடியு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளப்படும் என அதில் தெரிவித்துள்ள னர்.

இலங்கை பாஸ்போர்ட் மூலம் தமிழக தேர்தலில் வாக்களிப்பு நாமக்கல், தூத்துக்குடியைச் சேர்ந்த இருவர் கைது

மதுரை, மே 16- மதுரை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் குடியேற்றத்துறை அதிகாரி கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீ பத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெளி நாட்டு குடியுரிமை பெற்ற சிலர் விதிமுறைகளை மீறி வாக்களித்தது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, காவல் துறையும் குடியேற்றத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சன்னாசியின் மகன் கிருஷ்ணசாமி (62) என்பவர் இலங்கை பாஸ்போர்ட் பெற்று அங்கு தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் பெர்ணான்டோவின் மனைவி மேரி ஜெனோ (64), குடும்பத்தினர் தமிழ்நாட்டில் வசித்தாலும், தனது சகோ தரர் இலங்கையில் இருப்பதால் அங்கேயே தங்கி வந் துள்ளார். இலங்கை பாஸ்போர்ட் வைத்திருந்த மேரி ஜெனோ, சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. தேர்தல் முடிந்த பின் மீண்டும் இலங்கை திரும்புவதற்காக மதுரை விமான நிலையம் வந்தபோது, குடியேற்றத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை யில் அவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் கிருஷ்ண சாமியும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சட்டவிரோத வாக்களிப்பு தொடர்பாக அவனியா புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை குடியுரிமை பெற்ற கிருஷ்ண சாமி மற்றும் மேரி ஜெனோ ஆகியோருக்கு தற்போது நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் பலி

நத்தம், மே 16- மதுரை- பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர் பிச்சை (42). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10 ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தில் மனைவி ராணி (36) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் துவரங்குறிச்சிக்கு சென்று விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார். நத்தம் அருகே துவரங்குறிச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மங்கம்மா சாலை பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஆடு ஒன்று குறுக்கே வந்தது. இதை பார்த்த பிச்சை ஆடு மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்ததில் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேரும் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். ஆபத்தான நிலையில் இருந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லா மல் ராணி வெள்ளியன்று இறந்து விட்டார். மேலும் இச்சம்ப வம் குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

திருவில்லிபுத்தூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கல்லூரி முதல்வர் அறிவிப்பு

திருவல்லிபுத்தூர், மே 15- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு களுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கைக்காக (www. tngasa.in) என்ற இணையதள வாயிலாக விண்ணப்பிக்க லாம். இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.எஸ்.சி.கணிதம், பி.எஸ்.சி.கணிதவியல், மற்றும் பி.காம். வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுளுக்கு சேர்க்கை நடை பெற உள்ளது. கல்லூரியின் குறியீட்டு எண் : 1041026. மாணவ, மாணவியர் விண்ணப்பிக்க கல்லூரி அலு வலகத்தில் “மாணவர் உதவி மையம்” செயல்பட்டு வரு கிறது. மேலும் மாணவ, மாணவியல் தங்கி பயில்வதற்கு தனித்தனியாக அருகில் சமூக நீதி விடுதி உள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மே 29 இறுதி நாளாகும். எனவே, பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பம் செய்யுமாறு கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மின் மயானங்களில் இலவச அடக்கம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிற்கு வரவேற்பு

திண்டுக்கல், மே 16- திண்டுக்கல் மாவட்டத்தில் 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வசித்து வருகின்றனர். பொதுவாக, மின் மயானங்களில் உடலை எரித்து அடக்கம் செய்ய ஆயிரக்கணக்கில் செலவாகி வந் தது. பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ள மாற்றுத்திறனாளிகளின் குடும் பத்தினருக்கு இது பெரும் சுமையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார் பில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள மின் மயானங்களில் இறந்த மாற் றுத்திறனாளிகளை இலவசமாக எரித்து அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, திண்டுக் கல் மாவட்ட ஆட்சியர் வெள்ளியன்று முக் கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து மின் மயானங்களிலும் மாற்றுத் திறனாளி கள் உயிரிழந்தால், அதற்கான உரிய ஆவ ணத்தை சமர்ப்பித்த பின் இலவசமாக எரித்து அடக்கம் செய்ய வேண்டும் என அதிகாரி களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கையை உடனடியாக ஏற்று நடவ டிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் ஜெயந்தி, மாவட்டச் செயலாளர் எஸ். பகத்சிங் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தனி டிரான்ஸ்பார்மர் அமைத்து தர பட்டியலின மக்கள் கோரிக்கை

திருவில்லிபுத்தூர், மே 16- திருவில்லிபுத்தூர் ஊரக பகுதிக்கு உட்பட்ட அத்திகுளம் தேவேந்திரி ஊராட்சி யில் வடக்கு தெருவில் 250க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். ஒட்டுமொத்தமாக ஊராட்சி பகுதியில் 8 டிரான்ஸ்பார்மர் உள்ளன. பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதிக்கு எட்டு டிரான்ஸ்பார்மலில் இருந்து மின் விநியோ கம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பட்டி யலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள வீடுகளில் மின்விநியோகம் குறைந்த வோல்டேஜில் வருவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் தனியாக டிரான்ஸ்பார்மர் அமைத்து தரக்கோரி பட்டி யல் இன மக்கள், ஊரக உதவி பொறியாளர் கார்த்திக்கை சந்தித்தனர். அவரிடம் தனியாக டிரான்ஸ்பார்மர் கேட்டு மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், ஊரக உதவி செயற்பொறி யாளர் காலசாமியிடம் விபரத்தை கூறி நட வடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என்று உறுதியளித்தனர்.

விருதுநகரில் மின் மோட்டார் திருடியவர் கைது

விருதுநகர், மே 16- விருதுநகரில் முன்னாள் கல்லூரி முதல்வர் வீட்டில் மின் மோட்டார் திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த வரை போலீசார் கைது செய்தனர். விருதுநகரில் உள்ள கணேஷ்நகரைச் சேர்ந்த வர் சுந்தரபாண்டியன் (63). முன்னாள் கல்லூரி முதல்வரான இவர் வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர் மின் மோட்டாரை திருட முயன்றுள்ளார். அதை வீட்டின் காவலாளி பார்த்து விட்டார். பின்பு, இருவரும் சேர்ந்து அவரைப் பிடித்து மேற்கு காவல்நிலையத்தில் ஒப்ப டைத்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த பிரதீபுர்மன்(30) என்பது தெரியவந்தது.