தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மலேரியா இல்லாத மாவட்டம் சிவகங்கையில் மத்திய சுகாதார ஆய்வுக் குழுவினர் ஆட்சியருடன் கலந்தாய்வு

12 Jun 2026, 10:00 pm
மலேரியா இல்லாத மாவட்டம் சிவகங்கையில் மத்திய சுகாதார  ஆய்வுக் குழுவினர் ஆட்சியருடன் கலந்தாய்வு
<p><strong>மலேரியா இல்லாத மாவட்டம் சிவகங்கையில் மத்திய சுகாதார ஆய்வுக் குழுவினர் ஆட்சியருடன் கலந்தாய்வு </strong></p><p>சிவகங்கை, ஜூன் 12- மலேரியா இல்லாத மாவ ட்டமாக சிவகங்கை மாவ ட்டத்தினை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதார ஆய்வுக் குழுவினர், மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற் கொடியுடன் ஜூன் 11 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் முதல் கட்டகலந்தாய்வு மேற்கொண்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறிய தாவது: பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மலேரியா காய்ச்சல் ஒழிப்புப் பணிகளை மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு செய்து மலேரியா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் ஜூன் 11 முதல் 13 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு கள் தொடர்பான நடவடிக்கை கள் மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வுகள் தொடர்பாக மேற்கொண்டு வரும் நட வடிக்கைள் குறித்து சிவ கங்கை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் முதல் கட்ட கலந் தாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதன் தொட ர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள்,அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு மையங்களில் மத்திய சுகாதாரக் குழுவினர் தீவிர ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளவுள்ளனர். மேற்கண்டஆய்வில், தேசிய பூச்சி வழி பரவும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2017 முதல் 2026 வரையில் நடைபெற்ற மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மரு. நிஷிதா ரஞ்சன் தாஸ், மண்டல ஒருங்கிணைப்பா ளர், உலக சுகாதார நிறுவனம், ஒடிசா, மரு. அஞ்சு விஸ்வா ன், ஆராய்ச்சியாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, ஒடிசா, மரு. ஸ்ரீதரன் சுப்பிரமணியன், முன்னாள் முதன்மை பூச்சியியல் வல்லு னர், தமிழ்நாடு மற்றும் மரு. ரேகா குமாரி, மாவட்ட மலே ரியா அலுவலர், ஜார்க்கண்ட் ஆகிய வல்லுனர்கள் குழு தீவிர ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பி க்க உள்ளனர். மத்திய சுகாதார குழுவின ருடன் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதா ரத்துறை ஆகியவைகள் ஒருங்கிணைந்து தீவிர ஆய்வுப்பணிகள் மேற் கொண்டு, சிவகங்கை மாவட் டத்தினை மலேரியா இல் லாத மாவட்டமாக அறிவிப் பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆட்சியர் தெரி வித்தார். </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.