தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

25 ஆண்டுகளுக்கு பின் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு நில அளவை

1 Oct 2026, 10:43 pm
25 ஆண்டுகளுக்கு பின் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு நில அளவை

25 ஆண்டுகளுக்கு பின் ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கு நில அளவை

சிவகங்கை, அக்.1-சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் மாடக்கோட்டை கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களுக்கான நிலங்கள், 25 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை அளவீடு செய்யப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மாடக்கோட்டையில் வழங்கப்பட்ட பட்டாக்களுக்கான நிலங்களை அளவீடு செய்து பயனாளிகளிடம் ஒப்படைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துராமலிங்கபூபதி தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன் கலந்து கொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இதையடுத்து, தாசில்தார் ஆனந்த் பூபாலன் மேற்பார்வையில் 102 பட்டாதாரர்களுக்கான நிலங்கள் முறையாக அளவீடு செய்யப்பட்டு, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்களும் குடியேறும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுமனை பட்டா தொடர்பான பிரச்சனைக்கு தீர்வு கோரி போராடி வந்த

மாடக்கோட்டை கிராம மக்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றி தெரிவித்தனர். நீண்டகாலமாக நிலவி வந்த வாழ்வாதாரப் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.