அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி சிவகங்கை அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம் முதல்வரின் மிரட்டலுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்
21 Aug 2026, 9:41 pm

அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி சிவகங்கை அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் போராட்டம் முதல்வரின் மிரட்டலுக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

சென்னை, ஆக. 21-சிவகங்கை அரசு மகளிர் கலை மற்றும்அறிவியல் கல்லூரியில் போதிய வகுப்பறைகட்டிடங்களை உடனடியாகப் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வலியுறுத்திப் போராடியமாணவிகளை மிரட்டிவரும் கல்லூரி முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது.

நிர்வாகத்தின் அலட்சியம்

சிவகங்கை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 2,500 மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியின் வர்த்தக நிர்வாகவியல் துறையில் மட்டும் சுமார் 300மாணவிகள் பயின்று வரும் நிலையில், அவர்களுக்கு நீண்ட காலமாகப் போதிய வகுப்பறைகள் இல்லாமல்மாணவிகள் பெரும் சிரமத்திற்குஆளாகி வந்துள்ளனர்.

மாணவர்களுக்கான வகுப்பறை கட்டிடங்கள் புதிதாக அமைக்கப்பட்ட நிலையிலும், கல்லூரி நிர்வாகம் அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியுள்ளது. புதிய கட்டிடங்களை உடனடியாகத் திறக்கக் கோரி கல்லூரி முதல்வரிடம் மனு அளிக்கச் சென்றமாணவிகளைச் சந்திக்கஅவர் மறுத்துள்ளார். இதனால் ஏமாற்ற மடைந்த மாணவிகள் கடந்த ஆகஸ்ட் 19 அன்று கல்லூரியில் காத்திருப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர். கடும் வெயிலில் போராட்டம் நீடித்ததால் 12 மாணவிகள் மயக்கமடைந்தனர். அப்போதும் கோரிக்கையை ஏற்காததுடன், போராட்டத்தை மூடி

மறைக்கும் செயலிலும் நிர்வாகம் ஈடுபட்டது.கோபமடைந்த மாணவிகள் வாயில் பூட்டை உடைத்து, மயக்கமடைந்தவர்களைச் சிவகங்கை அரசுமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

மாணவர்களை மிரட்டும் முதல்வர்

தொடர் போராட்டங்களுக்குப் பிறகு கல்லூரி நிர்வாகம் வகுப்பறைக் கட்டிடங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளது. ஆனால், மாண வர்களின் நலனுக்காகப் போராடிய மாணவிகளை மிரட்டி, “போராடியது தவறு, நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கல்லூரி முதல்வர் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள் ளது. கல்வி உரிமைக்காகப்போராடும்மாணவிகளின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் வகுப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும்மேம்படுத்தவும், போராடும் மாணவிகளை மிரட்டும் முதல்வர் மீது துறை ரீதியான நடவடிக்கைஎடுத்துமாணவர்களின் உரிமையைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் சி. மிருதுளாமற்றும் மாநிலச் செயலாளர் தொ. சம்சீர் அகமதுஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.