10 வகை காய்கறித் தொகுப்பு விற்பனை தொடக்கம்
5 Nov 2026, 10:52 pm
<p><strong>10 வகை காய்கறித் தொகுப்பு விற்பனை தொடக்கம்</strong></p><p>சிவகங்கை, நவ.5–தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கியசிறப்புத் தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தொடங்கி வைத்தார். சிவகங்கை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.குழந்தை ராணி நாச்சியார் முன்னிலை வகித்தார்.சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, சிங்கம்புணரி ஆகிய மூன்று இடங்களில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இத்தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது. நிகழ்ச்சியில் கூட்டுறவுசங்கங்களின் இணைப் பதிவாளர் இராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
