டிச.31 இல் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்ட
26 Dec 2025, 4:32 pm
<p><strong>டிச.31 இல் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் </strong> </p>
<p>சிவகங்கை, டிச.26- சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 31 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார். டிசம்பர் 31 புதன்கிழமையன்று முற்பகல் 10 மணியள வில் நடைபெறவுள்ள கூட்டத்தில் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி தெரிவித்துள்ளார்.</p>
