மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சேவைகள் பெற வட்டார மறுவாழ்வு மையங்களை அணுகலாம்
7 Jun 2026, 10:43 pm

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு சேவைகள் பெற வட்டார மறுவாழ்வு மையங்களை அணுகலாம்

மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தகவல் சிவகங்கை, ஜூன் 6- சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் அரசு உதவிகள், சேவைகள் மற்றும் பயிற்சிகளை எளிதாக பெறுவ தற்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் உட்கோட்ட மற்றும் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறு வாழ்வு சேவை மையங்களை பயன் படுத்திக் கொள்ளலாம் என்று கா.பொற் கொடி தெரிவித்துள்ளார்.

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம், தமிழ்நாடு உரிமை கள் திட்டம் கடந்த 2025 ஜூன் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 160 முன்களப் பணியாளர்கள் மூலம் மாவட்டத்தின் 16 வட்டாரங்களி லும் வீடு தோறும் கணக்கெடுப்பு மேற் கொள்ளப்பட்டு, மாற்றுத்திறனாளிகளின் விபரங்கள் சிறப்பு செயலியில் பதிவு செய் யப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில், சிவகங்கை மற்றும் காரைக்குடியில் உட்கோட்ட அளவி லான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையங்களும், பல்வேறு வட்டாரங்களில் வட்டார அளவிலான சேவை மையங்க ளும் செயல்பட்டு வருகின்றன.

இந்த மையங்களில், ஆலோசனை சேவைகள், இயன்முறை சிகிச்சை, செயல் முறை சிகிச்சை, பேச்சு மற்றும் மொழித் திறன் பயிற்சி, கண் பரிசோதனை, பார்வைக் குறைபாடு தொடர்பான சேவை கள், செவித்திறன் குறைபாடுடையோ ருக்கான உதவிகள், அறிவுசார் குறைபாடு டையோருக்கான சிறப்புப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப் பட்டு வருகின்றன.

உட்கோட்ட அளவிலான மறுவாழ்வு சேவை மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படுகின்றன. வட்டார அளவிலான மையங்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை, திங்கள் முதல் சனிக்கிழமை வரை (அரசு விடுமுறை நாட்கள் தவிர) செயல்பட்டு வருகின்றன.

எனவே, சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் அனைத்து மாற்றுத்திறனாளி களும் தங்களது பகுதிக்கு அருகி லுள்ள உட்கோட்ட அல்லது வட்டார ஒருங்கி ணைந்த மறுவாழ்வு சேவை மையங்களை அணுகி அரசு நலத்திட்டங்கள், பயிற்சிகள் மற்றும் தேவையான சேவைகளைப் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி கேட்டுக் கொண்டுள்ளார்.