தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

2006-ல் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை அனைத்து பயனாளிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

14 Jun 2026, 11:28 pm
2006-ல் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை அனைத்து பயனாளிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
<p><strong>2006-ல் வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்களை அனைத்து பயனாளிகளுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்</strong></p><p>சிபிஎம் வலியுறுத்தல் சிவகங்கை, ஜூன் 14- சிவகங்கை மாவட்டம், நாடமங்கலம் குரூப்பிற்கு உட்பட்ட மாடக்கோட்டை கிரா மத்தில் 2006-ஆம் ஆண்டு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட பயனாளிகளில், இது வரை பட்டா பெறாத குடும்பங்களுக்கும் உட னடியாக பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முத்து ராமலிங்க பூபதி, மாவட்டக் குழு உறுப்பி னர் மெய்யப்பன், சிவகங்கை ஒன்றியச் செய லாளர் உலகநாதன் மற்றும் முருகன் ஆகி யோர் மாடக்கோட்டை கிராமத்திற்குச் சென்று பொதுமக்களை சந்தித்து அவர்க ளது கோரிக்கைகளை கேட்டறிந்தனர். பின்னர் மாவட்டச் செயலாளர் ஏ.ஆர். மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சிவகங்கை வட்டம், நாடமங்கலம் குரூப்பில் உள்ள மாடக்கோட்டை கிரா மத்தில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்காக 3.4 ஏக்கர் நிலம் கைய கப்படுத்தப்பட்டு, 101 குடும்பங்களுக்கு தலா 2 சென்ட் வீதம் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கடந்த 2006-ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் 10 குடும்பங்களுக்கு மட்டுமே அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப் பட்டது. மீதமுள்ள பயனாளிகளுக்கு இது வரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே, பட்டா பெறாத அனைத்து குடும்பங்களுக் கும் உரிய வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தகுதியுடைய அனைத்து குடும் பங்களுக்கும் வீட்டுமனை பட்டா கிடைக்க மாவட்ட நிர்வாகத்திடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தும்” என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.