முந்தய பக்கம்

சிவகங்கை குறைதீர் கூட்டத்தில் 329 மனுக்கள் பெறப்பட்டன

1 Jun 2026, 10:39 pm
சிவகங்கை குறைதீர் கூட்டத்தில் 329 மனுக்கள் பெறப்பட்டன
<p><strong>சிவகங்கை குறைதீர் கூட்டத்தில் 329 மனுக்கள் பெறப்பட்டன </strong></p><p>சிவகங்கை, ஜூன் 1- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட ரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 329 மனுக்கள் பெறப்பட்டன. இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாது காப்புத் திட்ட உதவித்தொகை, மாற்றுத்திறனாளி களுக்கான நலத்திட்ட உதவிகள் மற்றும் உபகர ணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், பொதுமக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்து, தகுதியான மனுக்கள் மீது முன்னுரிமை அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் ஜி.அரவிந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram