கோடைக்கால வெப்ப அலை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: ஆட்சியர்
24 May 2026, 11:01 pm

கோடைக்கால வெப்ப அலை பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: ஆட்சியர்

சிவகங்கை, மே 24- சிவகங்கை மாவட்டத்தில் நிலவி வரும் கடும் கோடைக்கால வெயில் மற்றும் வெப்ப அலை காரணமாக பொதுமக்கள் உடல்நல பாதிப்புகளை தவிர்க்க தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தெரி வித்துள்ளார்.

பொதுமக்கள் தினசரி தட்பவெப்ப நில வரங்களை ரேடியோ, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், உடலின் நீர்ச் சத்தை பாதுகாக்க போதுமான அளவு குடி நீர் பருக வேண்டும் என்றும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.

இளநீர், ராகி கஞ்சி, நீர்மோர் போன்ற திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளவும், அதிக உப்பு மற்றும் எண்ணெய் உணவுகள், குளிர்பானங்கள் மற்றும் மதுபானங்களை தவிர்க்கவும் அறி வுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வெப்பத் தால் உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கும் வகையில் ஓஆர்எஸ் உப்புக் கரை சலை பயன்படுத்துவது நல்லது என தெரி விக்கப்பட்டுள்ளது.

அரசின் வழிகாட்டுதலின்படி, சிவ கங்கை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் சந்தைகள் உள்ளிட்ட 20 இடங்க ளில் உப்புநீர் கரைசல் வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதை பொதுமக் கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் ஓஆர்எஸ் மற்றும் உப்புநீர் கரைசல் வழங்கப்பட்டு வருகிறது.

வெப்ப பாதிப்புக்கான சிகிச்சைக்காக ஆரம்ப சுகா தார நிலையங்களில் 2 படுக்கைகள், அரசு மருத்துவமனைகளில் 5 படுக்கைகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளில் 10 படுக்கைகள் தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், வெளியில் செல்லும்போது வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பி ணிப் பெண்கள் மற்றும் இணைநோயாளி கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், சோர்வு, அதிக வியர்வை, தலை வலி, மயக்கம், தோல் சிவத்தல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆடு, மாடு உள்ளிட்ட வீட்டு விலங்குகளையும் நிழலில் வைத்திருந்து போதுமான குடிநீர் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெப்ப அலை மற்றும் கடும் வெயில் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் அர சின் வழிகாட்டுதல்களை முறையாக பின் பற்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.