தேசிய வில்வித்தை போட்டியில் அசத்திய சிவகங்கை வீரர்கள் 10 பதக்கங்களுடன் உற்சாக வரவேற்பு
2 Jul 2026, 10:27 pm
<p><strong>தேசிய வில்வித்தை போட்டியில் அசத்திய சிவகங்கை வீரர்கள் 10 பதக்கங்களுடன் உற்சாக வரவேற்பு</strong></p><p>சிவகங்கை, ஜூலை 2- கோவாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான வில்வித்தை போட்டியில் சிவகங்கை மாவட்ட வீரர்கள் 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். கடந்த ஜூன் 27 முதல் 29 வரை நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா உள்ளிட்ட 13 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் சிவகங்கை மாவட்ட வீரர்கள் பதக்கங்களை குவித்ததன் மூலம், தமிழ்நாடு அணி ஒட்டுமொத்தப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம், வீரர்கள் நேபாளத்தில் நடைபெறவுள்ள சர்வதேச வில்வித்தை போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் பெற்றுள்ளதாக பயிற்சியாளர் தெரிவித்தார். போட்டியில் வெற்றி பெற்று வியாழக்கிழமை சிவகங்கை திரும்பிய வீரர்கள் - வீராங்கனைகளுக்கு ஊர் முக்கியஸ்தர்கள், சக வீரர்கள், பெற்றோர் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
