முந்தய பக்கம்

ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு

29 Jun 2026, 11:14 pm
ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா  வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு
<p><strong>ஆதி திராவிட மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆட்சியரிடம் மனு</strong></p><p>சிவகங்கை, ஜூன் 29- சிவகங்கை வட்டம், வேம் பங்குடி குரூப்பிற்கு உட்பட்ட மாடக்கோட்டை கிரா மத்தைச் சேர்ந்த ஆதி திரா விட மக்கள், இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், மாடக் கோட்டை கிராமத்தில் புல எண் 591ஏ-இல் 3.49 ஏக்கர் நிலத்தில் 101 பேருக்கு இல வச வீட்டுமனை பட்டா வழங் கும் உத்தரவு கடந்த 16.1. 2006 அன்று (ந.க.அ. 956/05) பிறப்பிக்கப்பட்டதாக தெரி விக்கப்பட்டுள்ளது. அதில் 2006 ஆம் ஆண்டு 10 பேருக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் மூலம் பட்டா வழங் கப்பட்ட நிலையில், மீத முள்ள 91 பேருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை என்றும், பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் காலதாம தம் ஏற்பட்டுள்ளதாகவும் மனு வில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வீடற்ற ஆதி திரா விட மக்களுக்கு உடனடி யாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பட்டா வழங்கப்பட வேண் டிய நிலத்தில் உள்ள ஆக்கி ரமிப்புகளை அகற்றி உரிய பயனாளிகளுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என் றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram