பத்தாம் வகுப்பு மாணவன் கொலை குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்
6 Jun 2026, 10:51 pm
<p><strong>பத்தாம் வகுப்பு மாணவன் கொலை குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள்</strong></p><p>சிவகங்கை, ஜூன் 6- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாண வன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகு தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரைச் சேர்ந்த நாக ராஜின் மகன் அஸ்வின் (15), அங் குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான வியா ழனன்று பள்ளிக்குச் சென்ற அவர், பள்ளி முடிந்த பின்னர் தனது நண் பர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஏற்பட்ட சம்பவத் தில், அஸ்வின் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கீழக்காவனூர் கண்மாய் பகுதியில் சடலமாகக் கண்டெடுக் கப்பட்டார். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சம்ப வத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், மாணவன் அஸ்வினின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறு தல் தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மோகன் உள்ளிட்டோர், குடும்பத்தினரை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்ததுடன், குற்ற வாளிகள் மீது விரைவாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். பள்ளி மாணவன் உயிரிழந்த இந்த சம்பவம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையின் விசாரணைக்குப் பிறகே சம்பவம் குறித்த முழுமை யான விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
