தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சீத்தாராம் யெச்சூரி: இந்திய இடதுசாரி இயக்கத்தின் உன்னத முகம் - எம்.ஜே.பிரபாகர்

17 May 2026, 8:50 pm
சீத்தாராம் யெச்சூரி:  இந்திய இடதுசாரி இயக்கத்தின் உன்னத முகம் - எம்.ஜே.பிரபாகர்

சீத்தாராம் யெச்சூரி: இந்திய இடதுசாரி இயக்கத்தின் உன்னத முகம் - எம்.ஜே.பிரபாகர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத ஆளுமையுமான தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் வாழ்க்கை வரலாறு என்பது, சுதந்திர இந்தியாவின் இடதுசாரி அரசியல் போராட்டங்களின் தொகுப்பாகும். அதனை எளிய வடிவில் ஆவணப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் வீ. பழனி.

மாணவர் எழுச்சி முதல் தேசிய அரசியல் வரை 1952-இல் சென்னையில் பிறந்து, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (JNU) மாணவர் சங்கத் தலைவராக உருவெடுத்த எச்சூரியின் அரசியல் வாழ்வை இந்நூல் விரிவாகப் பேசுகிறது. அவசரநிலைக் காலத்தில் அவர் சிறைப்படுத்தப்பட்டதும், அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு நேருக்கு நேராக நின்று அவரே வாசித்து அறிக்கையை சமர்ப்பித்ததும் வரலாற்றின் மறக்க முடியாத பக்கங்கள். தோழர்கள் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், ஜோதி பாசு ஆகியோருக்குப் பிறகு, இந்திய இடதுசாரி இயக்கத்தை நவீன அரசியல் சூழலுக்கு ஏற்ப வழிநடத்திய பெருமை யெச்சூரிக்கு உண்டு.

மக்களுக்கான 50 ஆண்டுகால உழைப்பு தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்க ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகவும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓடி ஓடி உழைத்தவர் அவர். பட்டியல் இன, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களின் குரலாக ஒலித்த யெச்சூரி, உலகளாவிய ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் ஊடக சுதந்திரத்திற்கான போராட்டங்களிலும் முன்னின்றவர். மார்க்சியக் கொள்கைகளில் சமரசமின்றி உறுதியாக இருந்தவர்; எதார்த்த அரசியலில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்றிணைப்பதில் ஒரு தலைசிறந்த தலைவராகவும் கட்சிகளுக்கு இடையே ஒரு “பாலமாகவும்” அவர் திகழ்ந்ததை நூல் மிகச் சரியாகப் பதிவு செய்துள்ளது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் குரல் மாநிலங்களவை உறுப்பின ராக அவர் ஆற்றிய உரைகள், இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை உலகத்தரத்தில் விவாதித்தவை ஆகும். அத்தகைய உயரிய பொறுப்புகளில் இருந்தபோதும், அவர் வாழ்ந்த எளிய வாழ்க்கை முறை இன்றைய தலைமுறை அரசியல்வாதிகளுக்கு ஒரு பாடம்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.