தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்

10 Feb 2026, 4:50 pm
அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
<p><strong>அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்</strong></p> <p>வேலூர், பிப்.10 - வேலூர் மாவட்டம்,காட்பாடியில் உள்ள வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் எல்எல்பி 3ஆம் ஆண்டு பயிலும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் லேப்டாப் வழங்கவில்லை எனக்கூறி சட்டக் கல்லூரியின் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். &nbsp;இதுகுறித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கூறுகையில், அரசு சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாண வர்களுக்கு வழங்கப்படவேண்டிய விலை யில்லா லேப்டாப் இதுநாள் வரை வழங்கப்படவில்லை. ஆனால் 4 மற்றும் &nbsp;5ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் எங்களுக்கு வழங்கப்படவில்லை ஆகவே அதை கண்டிக்கும் வகையில் நாங்கள் கல்லூரியில் உள்ளே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மாணவர்கள் தெரிவித்தனர். மாணவர்களின் போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற ஊடகவி யலாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மிரட்டும் தொனியில் பேசியதால் அங்கு &nbsp;பரபரப்பு ஏற்பட்டது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.