எஸ்.ஐ.ஆர். பணிகள் 100 விழுக்காடு நிறைவு அதிகாரி தகவல்
15 Dec 2025, 2:48 pm
<p><strong>எஸ்.ஐ.ஆர். பணிகள் 100 விழுக்காடு நிறைவு அதிகாரி தகவல் </strong></p>
<p>சென்னை, டிச. 15- எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படிவம் திரும்ப ஒப்படைப்பதற்கான அவகாசம் நிறை வடைந்தது. தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். படிவ விநியோகப் பணி 100 சதவிகிதம் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6.41 கோடி பேருக்கு எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், பூர்த்தி செய்து, திருப்பி அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றும் பணி 100 சதவிகிதம் முடிவடைந்துள்ளது என்று தெரி விக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 19 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. இதில், இறந்தவர்கள், இடம்பெயர்ந்த வர்கள், இரட்டைப்பதிவு என்று சுமார் 70 லட்சம் வாக்காளர்கள் உட்பட இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 80 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.</p>
