முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

19 Nov 2025, 3:33 pm
சென்னை விரைவு செய்திகள்
<p><strong>எஸ்ஐஆர் பணிச்சுமை &nbsp;அதிகாரி மயக்கம்</strong></p> <p>ராணிப்பேட்டை, நவ. 19 - சோளிங்கர் தேர்தல் துணை வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரி மயக்கம் அடைந்து விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோளிங்கர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் துணை வட்டாட்சியர் பிள்ளையார் கடந்த ஒரு வார காலமாக (எஸ்ஐஆர்) பணிச்சுமையால் இருந்து வந்ததாக &nbsp;கூறப்படுகிறது. இந்நிலையில் அலுவலகம் வந்த அவர் அதிகமாக ரத்த அழுத்தத்தின் காரணமாக மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சோளிங்கர் வட்டாட்சியர் செல்வி தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவருக்கு கடந்த சில நாட்க ளாக ரத்த அழுத்தம் பிரச்சனை இருந்து வரு வதாகவும், விடுமுறை கேட்டு இருந்த நிலையில் பணிக்கு வந்த அவர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார் என தெரி வித்துள்ளார். அவர் ஏற்கெனவே அரக்கோ ணத்தில் சிகிச்சை பெற்று வருவதால் அரக்கோ ணத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்வதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தங்கம் விலை &nbsp;சவரனுக்கு &nbsp;ரூ.800 உயர்வு சென்னை, நவ. 19&ndash; சென்னையில் புத னன்று 22 கேரட் ஆப ரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11, 500-க்கு விற்பனை செய்யப்படு கிறது. சிக்கன் ரைஸ் சாப்பிட்ட சிறுமி பலி நாமக்கல், நவ.19- பரமத்தி-வேலூர் அருகே, பாண்ட மங்க லத்தில், &lsquo;அம்மன் பிராய்லர்&rsquo; என்ற இறைச்சி கடை மற்றும் துரித உணவகம் உள்ளது. இங்கு உள்ளுரை சேர்ந்த &nbsp;விஜயலட்சுமி, சிறுவன் விஜய், சிறுமி வினிதா ஆகிய மூவரும், செவ்வாயன்று &nbsp;இரவு, சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் இரவு, 9 மணிக்கு, சிறுமி விஜய லட்சுமி திடீரென மயக்க மடைந்தார். &nbsp;அதிர்ச்சிய டைந்த அஞ்சம்மாள், பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி விஜயலட்சுமி &nbsp;ஏற்கெ னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram