தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர் பணிச்சுமை குஜராத், மேற்கு வங்கத்தில் பிஎல்ஓ-க்கள் தற்கொலை

22 Nov 2025, 4:09 pm
எஸ்ஐஆர் பணிச்சுமை குஜராத், மேற்கு வங்கத்தில் பிஎல்ஓ-க்கள் தற்கொலை
<p><strong>எஸ்ஐஆர் பணிச்சுமை குஜராத், மேற்கு வங்கத்தில் பிஎல்ஓ-க்கள் தற்கொலை</strong></p> <p>தமிழ்நாடு, கேரளம், குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் (யூனி யன் பிரதேசம் சேர்த்து) வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) நடைபெற்று வருகிறது. போதுமான பயிற்சி, கால அவகாசம் இல்லாமல் எஸ்ஐஆர் செயல்படுத்தப்பட்டு வருவ தால், வாக்குச்சாவடி நிலை அலுவ லர்களாக (பிஎல்ஓ) பணிபுரியும் அரசு ஊழியர்கள் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி வருகின்றனர். &nbsp;குஜராத் இந்நிலையில், பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிக் கான வாக்குச்சாவடி நிலை அலுவல ராக &nbsp;(பிஎல்ஓ) நியமிக்கப்பட்ட அரசு பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள் ளது. கிர் சோம்நாத் மாவட்டத்தில் தேவ்லி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் அரவிந்த் வதேர் வெள்ளிக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலை யில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலை &nbsp;செய்வதற்கு முன்பு அரவிந்த் தனது மனை விக்கு எழுதிய கடிதத்தில், &ldquo;தனது எஸ்ஐஆர் பணியைத் தொடர முடிய வில்லை. மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். மரணத்தைத் தவிர வேறு வழியில்லை&rdquo; என அதில் எழுதி யுள்ளார். பெண் ஆசிரியை தற்கொலை மேற்கு வங்க மாநிலத்தின் நாடியா மாவட்டம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரிங்கு டரப்டர் (வயது 54). அரசுப் பள்ளி ஆசிரியையான இவர் எஸ்ஐஆர் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராகச் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், எஸ்ஐஆர் பணிச் சுமை, மன உளைச்சலில் இருந்த ரிங்கு &nbsp;சனிக்கிழமை அன்று தனது வீட்டில் தூக்கி ட்டு தற்கொலை செய்துகொண்டார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.