முந்தய பக்கம்

எஸ்ஐஆர் பணி அழுத்தம்: ராஜஸ்தானில் பிஎல்ஓ பலி

30 Nov 2025, 3:38 pm
எஸ்ஐஆர் பணி அழுத்தம்: ராஜஸ்தானில் பிஎல்ஓ பலி
<p><strong>எஸ்ஐஆர் பணி அழுத்தம்: ராஜஸ்தானில் பிஎல்ஓ பலி</strong></p> <p>பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜ ராத் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர &nbsp;திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடைபெற்று &nbsp;வருகிறது. பயிற்சி மற்றும் திட்டமில்லா மல் குறுகிய காலத்தில் முடிக்க வேண் டிய கட்டாயம் உள்ள எஸ்ஐஆர் பணி யால் வாக்குச்சாவடி நிலை ஊழி யர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழி யர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வரு கின்றனர். எஸ்ஐஆர் பணி அழுத்தம் கார ணமாக 12 மாநிலங்களில் இதுவரை 30க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தற் &nbsp;கொலை மற்றும் மாரடைப்பால் உயிரி ழந்துள்ளனர். &nbsp;இந்நிலையில், பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தின் பாரா பகுதி யில் அரசு ஆசிரியராகப் பணியாற்றி வரு பவர் அனுஜ் கார்க் (42). இவர் எஸ்ஐஆர் &nbsp;பணிக்காக தோல்பூரில் வாக்குச்சா வடி நிலை அலுவலராக நியமிக்கப்பட்டி ருந்தார். சனியன்று இரவு 1 மணியளவில் வீட்டில் வைத்து வாக்காளர் பட்டியல் &nbsp;விவரங்களை பதிவேற்றம் செய்யும் பணி யில் ஈடுபட்டிருந்த போது அனுஜ் திடீ ரென மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் &nbsp;அவரை உடனடியாக மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரி ழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரி வித்தனர். கடந்த சில நாள்களாக கடும் பணிச்சுமைக்கு அவர் ஆளாகி யிருந்ததாகவும், அதில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசா ரித்து வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram