எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு!
19 Nov 2025, 3:33 pm
<p><strong>எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு தற்காலிகமாக ஒத்திவைப்பு!</strong></p>
<p>சென்னை, நவ. 19 - வருவாய்த்துறை அலுவலர் சங்கங் களின் கூட்டமைப்பு நடத்திய எஸ்ஐஆர் பணி புறக்கணிப்பு போராட்டம் அர சின் உறுதிமொழியைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி நெருக்கடியைக் கண்டித்து, வரு வாய்த்துறை அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஊரக வளர்ச்சித்துறை யினர், சத்துணவு, அங்கன்வாடி ஊழி யர்கள் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள் முழுமையாக பணிகளை புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர். இதனிடையே, வருவாய்த்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ. அமுதா மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எம். சாய்குமார் ஆகி யோர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப் பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து கோரிக்கைகளையும் ஏற்ப தாக உறுதியளித்தனர். இனி அதீத பணி நெருக்கடிகள் இருக்காது என்றும், விடு முறை நாட்களில் கட்டாயப் பணி கிடை யாது என்றும் உறுதியளித்தனர். தலைமை தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் தற்போது முகாம் பணியில் இருப்ப தால், சென்னை திரும்பியதும் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. போராட்டம் தொடங்கிய அன்றே பிஎல்ஓ மற்றும் கண்காணிப்பாளர் களுக்கான உயர்த்தப்பட்ட ஊக்க ஊதி யம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் பணியி டங்கள் உருவாக்கம், துணைப் பணியா ளர்கள் நியமனம், நள்ளிரவு ஆய்வுக் கூட்டங்கள் நிறுத்தம், களப்பணிக்கு முப்பது நாள் அவகாசம் உயர்த்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. இதையடுத்து, வருவாய்த்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு இந்த வெற்றிகரமான போராட்டத்தை தேசிய அளவில் கவ னம் பெறச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், பணிப் புறக் கணிப்பை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளது.</p>
<p> </p>
