தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர் பணியை ‘முறையாக முடிக்கவில்லை’யாம்! உ.பி.யில் 67 அரசு அதிகாரிகள் மீது வழக்கு

23 Nov 2025, 3:44 pm
எஸ்ஐஆர் பணியை ‘முறையாக முடிக்கவில்லை’யாம்! உ.பி.யில் 67 அரசு அதிகாரிகள் மீது வழக்கு
<p><strong>எஸ்ஐஆர் பணியை &lsquo;முறையாக முடிக்கவில்லை&rsquo;யாம்! உ.பி.யில் 67 அரசு அதிகாரிகள் மீது வழக்கு</strong></p> <p>வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) முறையாக முடிக்காததற்காக பாஜக ஆளும் உத்த ரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 60 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ), 7 மேற்பார்வையாளர்கள் மீது &nbsp;வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 181 பிஎல்ஓக்களுக்கு பணிநீக்க அறிவிப்பு வழங்கப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சிய ரின் அறிவுறுத்தலின்படி இந்த நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளது. நொய்டாவில் உள்ள பிஎல்ஓ-க்கள் &nbsp;வீடு வீடாகச் சென்று உரிய நேரத்தில் &nbsp;படிவங்கள் திரும்ப பெறுவதை போர்க் &nbsp;கால அடிப்படையில் முடிக்க கண்டிப் பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் மயமாக்கல் முடிக்கப்படாவிட்டால், தின சரி ஊதியம் ரத்து செய்யப்படும் என்ற &nbsp;எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வும் கூறப்படுகிறது. குறிப்பாக எஸ்ஐஆர் பதிவு நடவடிக்கைகளை தாம தப்படுத்துபவர்கள் சட்ட நடவடிக்கை யை எதிர்கொள்ள நேரிடும் என்ற அச்சு றுத்தல் உள்ளது. பிஎல்ஓ-க்கள் தீவிர மாக வேலை செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நேரடி ஆய்வுகளை நடத்த தேர்தல் பதிவு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் உத்தரப்பிரதேச மாநி லத்தில் எஸ்ஐஆர் பணி மூலம் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடும் நெருக்க டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.