எஸ்.ஐ.ஆர் என்னும் அரசியல் சதி - உ.வாசுகி
15 Jun 2026, 9:38 pm

எஸ்.ஐ.ஆர் என்னும் அரசியல் சதி - உ.வாசுகி

மூன்றாவது கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR - எஸ்.ஐ.ஆர்) தொ டங்கியுள்ளது. கடந்த இரு கட்டங்களின் மோசமான அனுபவம் நமக்கு உண்டு. எனவே, எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதி யாக நிற்பதோடு, இதன் மூலம் எவரும் வாக்குரி மையை இழந்துவிடாமல் இருக்க உரிய நடவடிக்கை களையும் எடுத்திட வேண்டும்.

ஒன்றிய பா.ஜ.க அரசின் ஒவ்வொரு நகர்வும் அவர்க ளின் இலக்கு நோக்கிய பயணத்தின் மைல்கல். அதாவது, இந்து ராஷ்டிரா என்னும் ஒட்டுமொத்த திட்டத்தின் பகுதிகள். எனவே, ஒவ்வொரு நகர்வை யும் விமர்சிக்கும்போது அவர்களின் இலக்கையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த நகர்வுகள் ஒரு சங்கிலியின் கண்ணிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம்தான் பாஜகவின் மிகப் பெரும் வில்லனாக உள்ளது. இந்துத்துவா ராஜ்ஜி யத்தின் அடிப்படைக்கு நேர் எதிரான விழுமியங்கள் அதில் உள்ளன. அரசமைப்புச் சட்டத் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பி னர்களின் ஆதரவு வேண்டும். எனவே இவர்கள் நியாய மாகத் தேர்தலைச் சந்தித்து, கொள்கையைச் சொல்லி வாக்குகளைப் பெற்று வெற்றி காண்பது கடினம்; ரிஸ்க் நிறைந்ததும் கூட.

இதற்குப் பல குறுக்கு வழிகள் உள்ளன. தவறுகள் நடக்காமல் கண்காணிக்கும் சில அரசமைப்புச் சட்ட அமைப்புகள் வேகத்தடை போடக்கூடும் என்பதால், அவற்றின் தலைமைப் பொறுப்புகளில் சங் பரிவார ஆட்களை நியமிப்பது, ஊடுருவல் செய்வது, அதன் மூலம் பா.ஜ.க நிகழ்ச்சி நிரலுக்கு ஏதுவாக விதிகளை வளைப்பது அல்லது அந்த அமைப்புகளையே தங்க ளுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவது போன்ற வேலை களை பா.ஜ.க அரசு செய்கிறது எனத் தொடர்ந்து எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

வளைக்கப்படும் தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம் இக்காலத்தில் கடும் விமர்ச னத்திற்கு உள்ளாகியுள்ளது. ஆணையத்தை வளைக் கும் நடவடிக்கை அதன் உறுப்பினர்கள் நியமனத்தில் இருந்தே தொடங்கியது. பிரதமர், மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் தலைமை நீதிபதி கொண்ட குழு ஆணையர்களை நியமிக்கலாம் என்ற உச்சநீதி மன்ற உத்தரவு (2023 - அனூப் பரன்வால் எதிர் ஒன்றிய அரசு) புறந்தள்ளப்பட்டு, பிரதமர், கேபினட் அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் கொண்ட குழு என்ற நிலை நாடாளுமன்றச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது. குழுவின் அமைப்பிலேயே பா.ஜ.கவுக்குச் சாதகமாக முடிவு மாறுவது நிலைநிறுத்தப்பட்டது.

அடுத்து, பா.ஜ.கவுக்குச் சாதகமாக வாக்காளர் பட்டி யலை ‘உருவாக்கும்’ அரசியல் சதித் திட்டம் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற வாடிக்கையான நடைமுறை, வாக்குரிமை மற்றும் குடியுரிமை பறிப்புக்கான கருவி யாக மாறியுள்ளது. இதற்கான பின்னணி அமித் ஷா வகையறாக்களுடையது. வயது வந்த அனைவருக் கும் வாக்குரிமை என்று போராடிப் பெற்ற உரிமை, ஒரு சில பகுதியினருக்கு மட்டும் என்றாகி ஜனநாயகம் விரோ தமாக்கப்படுகிறது. சி.ஏ.ஏ, என்.சி.ஆர் போன்ற முயற்சி களை விட, குடியுரிமை பறிப்புக்கான குறுக்கு வழி யாக இதனைப் பாஜக பார்த்திருக்கக் கூடும்.

மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக எஸ்.ஐ.ஆர்-க்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கப் பட்டது. அங்கு மார்க்சிஸ்ட் கட்சி வலுவான தொடர் போராட்டத்தை இறுதிவரை நடத்தியது. மேற்கு வங்க எஸ்.ஐ.ஆரை பாஜகவினர் எப்படிப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பது தனியாகவே ஆய்வு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

புதுவகை நீக்கம்

உதாரணமாக, ‘Logical discrepancies’ (தர்க்கரீதி யான முரண்பாடுகள்) என்ற புதிய பெயர் நீக்க வகை அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன் இத்தகைய முறை இருந்ததில்லை. நாம் கொடுக்கும் ஆவணங்க ளின் பெயர்களில் எழுத்துப்பிழை இருந்தால், பெற் றோர்-பிள்ளைகளுக்கு இடையே வயது வித்தியாசம் மிகக் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருந் தால், ஐந்து பேருக்கு மேல் தந்தை என ஒரே நப ரைக் குறிப்பிட்டிருந்தால் அவர்களைச் சர்ச்சைக் குரிய பட்டியலில் வைக்கிறார்கள்.

உதாரணமாக, மக்பால் ஷேக் என்ற பெயர் ஷேக் மக்பால் என்று இருந்தால் அது சர்ச்சைக்குரியதாகும். நிறைய பெண்கள் திருமணத்திற்குப் பின் கணவன் பெயரை இணைத்திருப்பார்கள்; அவர்களுக்கும் இதே கதிதான். உள்ளூர் கலாச்சார வழக்கங்கள் மென்பொருளுக்கு எப்படித் தெரியும்? இந்த வகை யில் வங்கத்தில் சுமார் 27 லட்சம் பேரின் வாக்குரிமை நீக்கப்பட்டுள்ளது. இதில் 25 சதவீதம் முஸ்லிம்கள் அதி கம் வாழும் இரு பிரதான பகுதிகளைச் சேர்ந்தது.

நீக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ததால் இவற்றை விசாரிக்க தீர்ப்பாயங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், பதவியில் இருக்கும் மற்றும் ஓய்வு பெற்ற 600 நீதிபதிகளையும் ஒதுக்கி யது. இதில் ஒருவர், இவற்றை விசாரித்துச் சரிபார்க்க நான்கு ஆண்டுகள் ஆகும் என்றார். இதிலிருந்து எவ்வளவு அவசரமாக இது நடந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு முன் 139 பெயர்களும், இரண்டாவது கட்டத்திற்கு முன் 1468 பெயர்களும் தான் தீர்ப்பாயங்களால் சேர்க் கப்பட்டன (டைம்ஸ் ஆஃப் இந்தியா, மே 28, 2026).

ஏற்கெனவே உச்சநீதிமன்றம் நீக்கப்பட்ட பெயர் பட்டியலை வெளியிடக் கூறியிருந்தது. அதை வரவேற்ற தேர்தல் ஆணையம், நீக்கிய பெயர் பட்டியலை, குறிப் பாக ‘others’ பட்டியலை 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழ் தகுதியான முகமைக்கு அனுப்புவோம் என்கிறது. இந்த வகைதான் அயல்நாட்டினர் என்ற சந்தேகத்திற் குரியது. இது கசியவிடப்பட்டு, சங் பரிவாரத்தின் தாக்கு தலுக்கு இவர்களை இலக்காக்கும் நோக்கமே இதன் பின்னணியில் உள்ளது. இது மிக ஆபத்தானது.

யாரெல்லாம் வாக்களிக்கக் கூடாது என்பதுதான் எஸ்.ஐ.ஆர்-இன் நோக்கம். ஒரு கோடி முஸ்லிம் ஊடு ருவல்காரர்களை நீக்குவதே இலக்கு என மேற்கு வங்க பாஜக தலைவர்கள் பகிரங்கமாக அறிவித்த னர் (The Wire, ஏப்ரல் 20, 2026). தேர்தல் ஆணைய மும் அதற்கேற்பவே நடந்தது. 2002 வாக்காளர் பட்டி யலில் பெயர் இல்லாதவர்கள் வாக்குரிமையற்றவர்கள் என அனுமானிக்கப்பட்டு, வாக்குரிமையை நிரூபிக்கும் சுமை அவர்கள் மீது சுமத்தப்பட்டது. அதற்குப் பிந்தைய தேர்தல்களில் அவர்கள் வாக்களித்தது கணக்கில் கொள்ளப்படவே இல்லை.

135 தொகுதிகளில் (45.9%) நீக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை, 2024 தேர்தலில் வெற்றி பெற்றவரின் வாக்கு வித்தியாசத்தை விட அதிகம்; சில தொகுதிக ளில் பல மடங்கு அதிகம். இது சில தொகுதிகளில் திரி ணாமுல் காங்கிரசுக்கும், பல தொகுதிகளில் பாஜக வுக்கும் ஆதரவாக அமையக்கூடியது.

நலத்திட்டங்கள் மறுப்பு

அடுத்த தாக்குதலாக, பீகார் மற்றும் மேற்கு வங்க பா.ஜ.க அரசாங்கங்கள், வாக்காளராக இருப்ப வர்களுக்கு மட்டுமே இனி அரசு நலத்திட்டங்கள் என அறிவித்துவிட்டன. பீகாரில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என 5 லட்சம் ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. நீக்கப்படுபவர்க ளில் சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் கூடுத லாக இருக்கும் பின்னணியில், இந்த நலத்திட்ட ரத்து இவர்களையே அதிகம் பாதிக்கும். இது தற்செயலா னது அல்ல.

மாநில அரசுகளின் நலத்திட்டங்களைப் பிரதமர் மோடி தொடர்ந்து விமர்சித்து வந்ததை நாம் பார்த் தோம். இலவசப் பேருந்து பயணம் மெட்ரோ திட்டத் தைக் கெடுக்கிறது, பேருந்துகள் அதிகம் ஓடுவது சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது என்றெல்லாம் குறை கூறினார். இப்போது பயனாளிகளைக் குறைக்கும் உத்தி எஸ்.ஐ.ஆர்-இன் உப விளைபொருளாக வந்துள் ளது. ஒரே கல்லில் இரு மாங்காய் அடிப்பதே ஆச்சரியம் என்பார்கள். ஆனால், பாஜக தேர்தல் ஆணையத்தின் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடித்துள்ளது.

வாக்குரிமையை யாரும் இழந்துவிடக் கூடாது, உரிய முறையில் வாக்காளர் பட்டியலை உருவாக்க வேண்டும் என்ற பொறுப்புதான் தேர்தல் ஆணையத்தி ற்கு அளிக்கப்பட்ட வலுவான அதிகாரத்தின் பின்புலம். அதற்கு நேர்மாறாகப் பலரது வாக்குரிமையை இழக்கச் செய்யும் நிலையை ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குடியுரிமை குறித்த ஆய்வு அதன் அதிகார வரம்புக்கு உட்பட்டதல்ல, உள்துறை அமைச்சகமே அதைத் தீர்மானிக்க வேண்டும் என்ற வாதங்கள் முன் வைக்கப்பட்டன. ஆனால், இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எஸ்.ஐ.ஆர்-இல் ஈடுபட தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது எனவும், குறுகிய வரம்பிற்குள் குடியுரிமை குறித்து விசாரிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இல்லாத அதிகாரம் இப்போது வழங்கப்பட்டுவிட்டது.

தொகுதி மறுசீரமைப்பையும் இந்துத்துவ இலக்கை விரைவுபடுத்தும் கருவியாக சங் பரிவாரம் பயன்படுத்த முனைகிறது. இஸ்லாமியர் அதிகம் உள்ள தொகுதி யை வெட்டி மற்றொன்றுடன் சேர்த்து அவர்களைப் பெரும்பான்மையற்றவராக்குவது; பாஜக கால் ஊன்ற முடியாத கேரளா, தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களை விட, தங்களுக்குச் சாதகமான வட மாநிலங்களில் தொகுதிகளை அதிகரிப்பது என்ற நோக்கம் இதில் பிரதானமாக உண்டு. அந்தத் திருத்த மசோதா தோற்றிருந்தாலும், மீண்டும் கொண்டு வரவே பாஜக முயற்சிக்கும். இந்துத்துவா ராஜ்ஜியத்தை அமைக்க மோசடியான, சூழ்ச்சிகள் நிறைந்த பாதை யைத் தேர்ந்தெடுக்க அவர்கள் தயங்க மாட்டார்கள்.

மொத்தத்தில், தேர்தல் எப்போது நடந்தாலும் முடிவுகள் பாஜகவுக்குச் சாதகமாக அமையும் முயற்சி களின் ஒரு பகுதிதான் எஸ்.ஐ.ஆர். அது தேர்தல் வெற்றிக்கான குறுக்கு வழி மட்டுமல்ல; இந்து ராஷ்டி ரம் எனும் இந்துத்துவா ராஜ்ஜியத்தை அமைக்கும் பாதையில் அல்லது பெரு முதலாளித்துவ ஆதரவுப் பாதையில் இருக்கும் தடைகளை புல்டோசர் வைத்து அகற்றும் ஏற்பாடு. அதை முறியடிக்க வலுவான எதிர்ப்பை உருவாக்குவோம்!