எஸ்.ஐ.ஆர். பூர்த்தி செய்த படிவத்தை நவ.30க்குள் பெற வாய்மொழி உத்தரவு
28 Nov 2025, 2:28 pm
<p><strong>எஸ்.ஐ.ஆர். பூர்த்தி செய்த படிவத்தை நவ.30க்குள் பெற வாய்மொழி உத்தரவு</strong></p>
<p>திருப்பூர், நவ.28- திருப்பூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பணியை வரும் 30ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமைக்குள் முடிக்கும்படி வாக்குச்சா வடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப் பித்துள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் அவ சர கோலத்தில் அறிவித்து நடைமுறைப் படுத்தி வரும் எஸ்.ஐ.ஆர். பணி தற் போது பல்வேறு குளறுபடிகளுடன் திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களிடம் கொடுத்து அவர்கள் பூர்த்தி செய்த படி வத்தை பெறுவதற்கு டிசம்பர் 4ஆம் தேதி என தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனிஷ் நாரண வரே வியாழனன்று செய்தியறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் வாக்கா ளர்கள் டிசம்பர் 4ஆம் தேதி கடைசி நாள் வரை காத்திருக்காமல் ஓரிரு நாட்களில் தங்கள் பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சா வடி அலுவலர்களிடம் (பிஎல்ஓ) ஒப்ப டைக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் எஸ்.ஐ.ஆர். கணக்கீட்டு படி வத்தை வாக்காளர்களிடம் கொடுத்து, பூர்த்தி செய்த படிவத்தை வாங்கக்கூ டிய பிஎல்ஓக்களிடம் கேட்டபோது, தங்க ளுக்கு நவம்பர் 30ஆம் தேதிக்குள் எஸ். ஐ.ஆர் பூர்த்தி செய்த படிவங்களை வாக் காளர்களிடம் பெற்று பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்ப தாகத் தெரிவித்தனர். எனினும் ஆரம் பத்தில் இருந்த குளறுபடியான நிலை சற்று குறைந்திருக்கிறது. பூர்த்தி செய்த படிவங்கள் வாக்காளர்களிடம் இருந்து ஓரளவு வந்துள்ளன. எனினும் மாவட்ட நிர்வாகம் சொல்லியிருக்கும் காலக்கெடுவுக்குள் இப்பணியை முழு மையாக முடிக்க முடியாது. எங்களுக் குத்தான் நெருக்கடி அதிகம் என்றும் கூறினர். ஏற்கெனவே டிசம்பர் 4ஆம் தேதி இறுதி நாள் என்றாலும் கூட இப்ப ணியை நூறு சதவிகிதம் முடிக்க முடி யாது. அதிலும் நான்கு நாட்கள் முன்ன தாகவே முடிக்கும்படி கூறினால் நாங் கள் என்ன செய்வது என்று வேதனை யுடன் கேள்வி எழுப்பினர். எனினும் டிசம்பர் 4ஆம் தேதி இறுதி நாளில் முடிப்பதற்கு இப்போதிருந்தே நினைவூட்டினால்தான் இப்பணியை முடிக்க முடியும் என்பதால் மாவட்ட நிர் வாகம் நவம்பர் 30 என்று கெடு விதித்தி ருக்கலாம் என தேர்தல் பணியில் ஈடுபட் டுள்ள சிலர் கூறினர். அதேசமயம் ஏற்கெ னவே எஸ்.ஐ.ஆர்.பணி வாக்காளர்க ளின் வாக்குரிமையைப் பறிக்கும் உள் நோக்கத்துடன் அவசர கதியில் நிறை வேற்றுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், தேர்தல் ஆணையமே கொடுத்திக்கும் காலக்கெடுவையும் குறைத்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது சந்தேகத்தை ஏற்ப டுத்துவதாக உள்ளது என்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறு கின்றனர். திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சராசரியாக ஒரு வாக்குசாவடிக்கு 1400 வாக்குகள் இருந்தால் இதுவரை சுமார் 750 எஸ்ஐஆர் கணக்கெடுப்புப் படிவங்கள் மட்டுமே வாக்காளர்க ளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. சராசரி யாக 650 படிவங்கள் இன்னும் வாக்கா ளர்கள் கைகளுக்கே போய்ச் சேர வில்லை. மேலும் கொடுக்கப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களிலும் சுமார் 530 படிவங்கள் மட்டுமே இதுவரை பூர்த்தி செய்து திரும்பக் கொடுக்கப் பட்டுள்ளன. திருப்பூர் மாநகரில் சராசரி யாக 28.45 சதவிகிதம் மட்டுமே பூர்த்தி செய்த எஸ்ஐஆர் படிவங்கள் வந்துள் ளன. 30 சதவிகிதத்தைக் கூட எட்ட வில்லை. 70 சதவிகிதத்திற்கு மேல் எஸ் ஐஆர் படிவம் வாக்காளர்களிடம் கொடுத்து பூர்த்தி செய்து வாங்கப்படாத நிலை உள்ளது. திருப்பூரைப் பொறுத்த வரை எஸ்.ஐ.ஆர் பணி மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தேர் தல் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரி யர்கள் கூறுகின்றனர்.</p>
