முந்தய பக்கம்

எஸ்ஐஆர் கணக்கெடுப்பு அரசியல் கட்சி முகவர்களுக்கு அனுமதி

17 Nov 2025, 3:10 pm
எஸ்ஐஆர் கணக்கெடுப்பு அரசியல் கட்சி முகவர்களுக்கு அனுமதி
<p><strong>எஸ்ஐஆர் கணக்கெடுப்பு அரசியல் கட்சி முகவர்களுக்கு அனுமதி</strong></p> <p>சென்னை, நவ.17 - தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளின் ஒரு பகுதியாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் &nbsp;கட்சிகளின் பூத் நிலை முகவர்கள் நாளொன் றுக்கு 50 கணக்கெடுப்பு படிவங்களை வாக்கா ளர்களிடமிருந்து பெற்று வாக்குச்சாவடி அலு வலரிடம் சமர்ப்பிக்கலாம் என தமிழக தலை மைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் முழுமையான பங்க ளிப்பை உறுதி செய்யும் நோக்கில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு வரை அங்கீகரிக்கப்பட்ட பூத் ஏஜெண் டுகள் படிவங்களைப் பெற்று வழங்க இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. படிவங்களை சமர்ப்பிக்கும்போது பூத் ஏஜெண்டுகள் கட்டாயம் உறுதிமொழி அளிக்க &nbsp;வேண்டும். வழங்கப்படும் தகவல்கள் அனைத் தும் வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப் பட்டது என உறுதி அளிக்க வேண்டும். தவறான தகவல்கள் அளிப்பது மக்கள் பிரதி நிதித்துவச் சட்டத்தின்படி தண்டனைக்குரி யது என்பதை உணர வேண்டும். பெறப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் சரிபார்த்து டிஜிட்டல் வடிவமாக மாற்றி, வாக்காளர் பதிவு அலுவலருக்கு சமர்ப்பிப்பார்கள். வாக்காளர் பதிவு அலுவலர் அந்தப் படி வங்கள் மீது ஆய்வு செய்து உரிய நடவ டிக்கை மேற்கொள்வார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram