கள்ளக்குறிச்சியில் எஸ்.ஐ.ஆர். சிறப்பு கருத்தரங்கம்
10 Nov 2025, 5:08 pm
<p><strong>கள்ளக்குறிச்சியில் எஸ்.ஐ.ஆர். சிறப்பு கருத்தரங்கம்</strong></p>
<p>கள்ளக்குறிச்சி, நவ.10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்டக் குழு சார்பில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்த சிறப்பு பேரவைக் கூட்டம் எலவனாசூர் கோட்டையில் மாவட்ட குழு உறுப்பினர் எம்.செந்தில் தலை மையில் திங்களன்று (நவ. 10) நடை பெற்றது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் ஏ.ஆறு முகநயினார் கலந்து கொண்டு பேசுகை யில், ஆர்எஸ்எஸ் பின்புலத்துடன் நடக்கும் பாஜக ஆட்சி கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கலவரங்களை தூண்டிவிட்டு ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக நாடு முழுவதும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஆர்.எஸ்.எஸ் கொள்கையை அமுல்படுத்த முயற்சிக்கிறது. பாஜக அரசு பீகாரில் செய்தது போல் தமிழகத்திலும் எஸ்.ஐ.ஆர். முறையை நடைமுறைப்படுத்தி வெற்றி பெற நினைக்கிறது. இந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் மற்ற மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். வேலையின்மை, பொரு ளாதார நெருக்கடி போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பாஜக எஸ்.ஐ.ஆரை கொண்டு வந்துள்ளதாகக் கூறினார். இதில் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், எம்.பூவராகன், டி.ஏழுமலை, வி.ஏழுமலை, ஜெ.ஜெயகுமார், எலவ னாசூர்கோட்டை ஒன்றியச் செயலாளர் வி.ரகுராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
