எஸ்ஐஆர் : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன முழக்கம்
11 Nov 2025, 3:41 pm
<p><strong>எஸ்ஐஆர் : மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன முழக்கம்</strong></p>
<p>தமிழ்நாட்டில் நவ.4 அன்று முதல் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை (எஸ்ஐஆர்) மேற்கொண்டு வருகிறது. பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் திருத்தத்தில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதே நிலை தமிழகத்திற்கும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே எஸ்ஐஆரை ஒரு மாத கால அவகாசத்தில் மேற்கொள்ளக் கூடாது; தேர்தல் முடிந்த பின்பு கால அவகாசம் கொடுத்து, அதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மாநிலம் முழுவதும் செவ்வாயன்று மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
