தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர் குளறுபடி! மக்கள் அச்சம்! அதிகாரிகள் தவிப்பு!

14 Nov 2025, 1:26 pm
எஸ்ஐஆர் குளறுபடி! மக்கள் அச்சம்! அதிகாரிகள் தவிப்பு!
<p><strong>எஸ்ஐஆர் குளறுபடி! மக்கள் அச்சம்! அதிகாரிகள் தவிப்பு!&nbsp;</strong></p> <p>எஸ்ஐஆர் (SIR) எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர் பான கணக்கெடுப்பு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களிடையே பெரும் குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. குறிப்பாக, வாக்காளர் சீர்திருத்தப் படிவங்களை பூர்த்தி செய்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அவற்றை உரியவர்களிடம் சேர்ப்பதில் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்கள் ஆகியவை அரசு ஊழியர்கள் முதல் பொது மக்கள் வரை அனைவருக்கும் சவாலாக உள் ளன. நாமக்கல், ஈரோடு மற்றும் கோவை உள் ளிட்ட பகுதிகளில் வாக்காளர் சீர்திருத்தப் பணிகளின் கள நிலவரம் மற்றும் பொதுமக்க ளின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் தொகுப்பு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணி களை மேற்கொண்டிருந்த அங்கன்வாடி ஊழி யர் ஒருவர் கூறுகையில், &ldquo;பெரும்பாலான படி வங்களுக்குரிய தொலைபேசி எண் கிடைக்கப் பெறுவதில்லை. அப்படியே எண்கள் கிடைத்தா லும், பாதி எண்கள் செயல்படாமலும், பலர் வெளியூரிலும் இருப்பதால் உரிய பயனாளிக ளைக் கண்டறிந்து படிவங்களைச் சேர்க்க &nbsp;முடியவில்லை. அடையாளம் காணப்பட்டவர்க ளுக்கு கொடுத்ததைவிட, அடையாளம் காணப்படாத ஏராளமான வாக்காளர் படிவங் கள் இன்னும் எங்களிடம்தான் கைவசம் உள் ளன. கட்சி நிர்வாகிகள் உதவியுடன்தான் பணி களைத் தொடர்ந்து செய்து வருகிறோம்&rdquo; என் றார். &nbsp;குமாரபாளையத்தைச் சேர்ந்த சமூக ஆர்வ லர் விக்னேஷ் என்பவர், இந்த சீர்திருத்தப் பணி குறித்த தனது கவலையையும் கேள்வி களையும் முன்வைக்கிறார். &ldquo;தேர்தல் ஆணையம் தற்போது வாக்கா ளர்களை வடிகட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது. நன்கு வளர்ச்சியடைந்த நகரப் பகுதிகளிலேயே உரிய வாக்காளர்களைக் கண்டறிய முடியாமல் அரசு ஊழியர்கள் தடு மாறி வருகின்றனர். அப்படியிருக்க, கிராமப் புறப் பகுதிகளில் இந்தப் பணிகளை எப்படி முழுமையாக செய்து முடிப்பார்கள் என்று நினைத்தாலே கவலையாக இருக்கிறது. அரசு தரப்பில் 80 முதல் 90% படிவங்கள் வழங் கப்பட்டுவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால், அது கள நிலவரத்தைப் புரிந்து கொள்ளாமல் கூறப்படுகிறதோ என்று தோன்றுகிறது. பிஎல்ஓ (BLO) எனப்படும் அரசு ஊழியர்களுக்கு படி வங்கள் வந்து சேருகின்றன. இவர்களின் கைக ளில் வந்ததை வைத்துக்கொண்டு 90 சதவீ தம் படிவங்களை விநியோகித்து விட்டதாக கூறு வது பெரும் அபத்தம். அவர்கள் உரியவர் களிடம் படிவங்களை சேர்க்க முடியாமலும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற முடியாமலும் தவித்து வருவதுதான் கள எதார்த்தம்.&rdquo; என்றார். கோவை, மதுக்கரை ஒன்றியத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற மின் ஊழியர் விஜயலட்சுமி, &ldquo;சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான விண்ணப்பத்தை கொடுத்துள்ள னர். ஆனால், அதை பூர்த்தி செய்வதில் பல் வேறு குழப்பங்கள் உள்ளன. ஒருவேளை தவறு தலாக பூர்த்தி செய்தால், ஒரு விண்ணப்பப் படிவம் வீணாகிவிடும் என்ற பயம் இருக் கிறது. எனக்குக் கொடுத்த படிவத்தில் எனது பெயர், ஆதார் எண், செல்போன், பிறந்த &nbsp;தேதி தவிர வேறு எந்தக் கேள்விக்கும் என்ன &nbsp;பூர்த்தி செய்வது என்று தெரியவில்லை, அத னால் வெறும் கோடு மட்டும் போட்டுவிட்டேன். இப்போது கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத் தில், &lsquo;பாதுகாவலர் யார்?&rsquo; என்ற கேள்வி உள் ளது. அதற்கு மகனின் பெயரைக் குறிப்பிட் டால், அவனது தந்தை, தாய் பெயர், ஆதார் &nbsp;எண் உள்ளிட்ட விவரங்களைக் கேட்கிறார்கள். எனது கணவர் இறந்து ஆறு ஆண்டுகள் ஆகி விட்டது. அவரது ஆதார் எண்ணை நான் எங்கி ருந்து எடுப்பது? எனக்குக் கொடுத்த படி வத்தை நான் பூர்த்தி செய்யாவிட்டால், வாக்கு ரிமை போய்விடுமோ என்ற அச்சமாக உள் ளது. ஓரளவு படித்த எனக்கே இந்த விண்ணப் பத்தை பூர்த்தி செய்யச் சிரமமாக இருக்கும் போது, படிக்கத் தெரியாத மக்கள் இதை &nbsp;எப்படி புரிந்து பூர்த்தி செய்யப் போகிறார் கள்?&rdquo; சூலூர் மற்றும் அன்னூர் அருகே உள்ள &nbsp;கிராமங்களைச் சேர்ந்த வயதான விவசாயிக ளும், கிராம மக்களும் இந்த எஸ்ஐஆர் கணக் கெடுப்பால் சந்திக்கும் சவால்களைப் பற்றி விவரிக்கின்றனர். ராமசாமி (65), விவசாயி, சூலூர் &ldquo;எனக்கு 65 வயதாகிவிட்டது. எங்க கிராமத் துல தோட்டத்துக்குப் போயிட்டு இருப்பேன். பிஎஸ்ஓ வந்து படிவம் கொடுத்தார். &lsquo;2002-இல் உங்க அப்பா-அம்மா பெயர், வாக்காளர் அடை யாள அட்டை எண், பாகம் எண் எல்லாம் போட ணும்னு&rsquo; சொன்னார். 23 வருஷத்துக்கு முன் னாடி இருந்த விவரத்தை நான் எங்கே போய் தேடுவது? எனக்கு இன்டர்நெட் இல்லை, படிக்கத் தெரியாது. என் மகன் சென்னையில இருக்கான். அதுமட்டுமில்லாம, இறப்புச் சான் றிதழ் கேட்குறாங்க. என் அம்மா 30 வருஷத் துக்கு முன்னாடி இறந்துட்டாங்க, அது எங்க &nbsp;கிடைக்கும்? ஒரு மாசத்துல பூர்த்தி பண்ண லைன்னா என் பெயரை நீக்கிடுவாங்களாம். ஏழை கிராமத்து வயசானவங்களை வாக்களிக்க விட மாட்டாங்களா?&rdquo; என்றார் அப்பாவியாக. லட்சுமி (76), (பச்சாபாளையம்), அன்னூர் &ldquo;என் கணவர் 10 வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார். பிஎஸ்ஓ வந்து அவர் பெயர் இன் னும் வாக்காளர் பட்டியல்ல இருக்கு, இறப்புச் சான்றிதழ் கொடுன்னார். சான்றிதழ் இல்லை, &nbsp;ஊர்ல பதிவு பண்ணல. இப்போ என் பெயரை யும் நீக்கிட்டாங்க. படிவத்துல &lsquo;2005-இல் உங்க &nbsp;உறவினர் விபரம் போடணுமாம்&rsquo;. நான் படிக்கத் தெரியாதவ. மொபைல் இல்லை, ஓடிபி வரல. இ-சேவை மையத்துக்கு 10 கிலோமீட்டர் போக ணும், கால்ல வலி. வயசான பெண்களை வேண்டுமென்றே துன்புறுத்துறாங்கன்னு தான் தோணுது. எங்க கிராமத்துல பல பேர் இதே &nbsp;பிரச்சனைனு சொல்லி புலம்பிட்டு இருக்காங்க. &nbsp;என்ன செய்யறதுன்னு ஒன்னும் புரியல...&rdquo; முருகன் (75), மாடு மேய்ப்பவர், சுல்தான்பேட்டை &ldquo;எங்க ஊர்ல 50 வயசுக்கு மேல இருந்த 30 பேரின் பெயரை நீக்கிட்டாங்க. BLO ஒரு நாள் &nbsp;வந்து வீடு பூட்டியிருந்ததால, யாரும் இல்லைனு &nbsp;குறிச்சிட்டு போய்ட்டார். நாங்க வேலைக்காக வெளிய போயிருந்தோம். இப்போ படிவம் பூர்த்தி பண்ணி ஆன்லைன்ல போடணுமாம். படிக்கத் தெரியாது, மொபைல் இல்லை. &lsquo;2002 வாக்கா ளர் அடையாள அட்டை எண்&rsquo; கேக்குறாங்க &ndash; அது எங்க கிடைக்கும்? ஏழை கிராமத்து மக்களை &nbsp;வாக்குச்சாவடியிலிருந்து துரத்துற திட்டமோனு சந்தேகமா இருக்கு...&rdquo; என்றார். கருப்பாயி, ஈரோடு கிழக்கு &nbsp;அந்த பார்ம் கொடுத்துட்டு போய் ஒரு வாரம் ஆச்சுங்க. அது எப்படி எழுதுரதுன்னு &nbsp;தெரி யாம அப்படியே வச்சுக்கிட்டு இருக்காங்க என்ன பண்றதுன்னு தெரியல. என்றார். முருகன், ஈரோடு அம்பேத்கர் நகர் &nbsp;ஈரோடு கிழக்கு தொகுதியில் இருக்கி றங்க. கடந்த இடைத்தேர்தலில் கூட ஓட்டு போட் டேன். அப்போ வாக்கு சேகரிக்கு வந்த முதல மைச்சர் எங்கள் வீட்டிற்கு வந்து நேரில் என் கிட்ட பேசினாரு வாக்கு கேட்டாரு. இப்போ படிவம் கொடுத்துட்டு போயிருக்காங்க. அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை. கடந்த முறை வாக்களிக்க போனபோது எடுத்துச் சென்ற வாக்காளர் அட்டையை காட்டி இது வேஸ்டா (இனிமே பயன்படாதா) என்று கேட்டார். தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தான். எங்கள் வாக்கு இடம்பெறவில்லை என்றால் &nbsp;கடைசி நேரத்தில் அவரைப் போய் கேட்க முடி யாது, எனவே. தேர்தல் ஆணையமே எங்கள் வாக்காளர் கணக்கீட்டு படிவங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். எழுதப்படிக்க தெரியாத அருந்ததியர்களை இலங்கை தமிழர்களைப் போல அகதிகளாக்கப்பார்க்கிறது, என்றார். &nbsp;மகேஸ்வரன் &ndash; உடுமலை புதிய வாக்காளர்கள் ஆய்வு செய்ய இது வரை ஊரில் முழுமையாக தரப்படவில்லை. இந்த நிலையில் எங்களை போல் விவசாய நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு எப்படி விண்ணப்பங்களை தருவார்கள். மேலும் தரப்பட்ட விண்ணப்பங்களை திரும்ப பெற முடி யாது. தற்போது இங்கு பரவலாக மழை பெய்து வருவதால் எளிதில் வரமுடியாது. இதனால் விவசாய நிலங்களில் குடியிருக்கும் மக்களின் வாக்குரிமை என்பது கேள்விக்குறியாகும். இதை கவனத்தில் கொண்டு வாக்காளர் திருத்தப்பணியை நிறுத்த வேண்டும். சட்ட மன்ற தேர்தலுக்கு பிறகு இந்த வேலையை தொடங்கலாம் என்றார். செல்வம், உடுமலை அடிப்படை வசதி இல்லாத மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்ய அதிகாரிகளே வர முடியாத நிலையிலும், உள் ளாட்சி தேர்தலில் வாக்கு செலுத்த அனுமதிக் காத நிலை உள்ளது. ஆனால் இந்த புதிய வாக்காளர் சரிபார்ப்பு எப்படி மலைவாழ் மக்க ளின் குடியிருப்பு பகுதிக்கு வந்து சரிபார்ப் பார்கள் என்று தெரியவில்லை. இதனால் பாதிக் கும் மேற்பட்ட வாக்குகள் நீக்கம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. உடனடியாக இந்த சரிபார்ப்பு வேலையை தடுக்க வேண்டும், என்றார். &nbsp;எஸ்ஐஆர் கணக்கெடுப்பானது, பழைய &nbsp;ஆவணங்களைக் கேட்பது, பூர்த்தி செய்வதில் உள்ள குழப்பங்கள், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியாத நிலை (மொபைல், இணையம்) மற்றும் ஊழியர்களால் உரிய பயனாளிகளை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஆகிய காரணங்களால் மக்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், வாக்குரிமை பறிபோகும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. &nbsp;(ந.நி)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.