தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடியுரிமையை பறிக்கும் உள்நோக்கம் கொண்டது எஸ்.ஐ.ஆர்

19 Nov 2025, 3:33 pm
குடியுரிமையை பறிக்கும் உள்நோக்கம் கொண்டது எஸ்.ஐ.ஆர்
<p><strong>குடியுரிமையை பறிக்கும் உள்நோக்கம் கொண்டது எஸ்.ஐ.ஆர்</strong></p> <p>திருப்பூர், நவ.19- எஸ்.ஐ.ஆர் இந்தியர்க ளின் ஒரு பகுதியினரின் குடி யுரிமையை பறிக்கும் உள் நோக்கம் கொண்டதாக உள் ளது என திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பரா யன் புதனன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள &nbsp;இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில், &nbsp;திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் புதனன்று &nbsp;செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூறுகையில், தேர்தல் ஆணையத்தால் மேற் கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர் இந்தி யர்களின் ஒரு பகுதியினரின் குடியுரிமையை பறிக்கும் உள்நோக்கம் கொண்டதாக உள் ளது. தமிழ்நாட்டில் மிகக்குறுகிய காலத்தில் &nbsp;6 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை சந் தித்து, சரிபார்ப்பது நடைமுறை சாத்தியம் &nbsp;இல்லாதது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 97 சத விகிதம் படிவம் விநியோகப்பட்டு விட்டதாக கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் அதற்கு சாத்தியமுமில்லை. தமிழ்நாட்டில் மட்டும் 80 லட்சம் முதல் 1 கோடி வாக்கா ளர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே &nbsp;எஸ்.ஐ.ஆர் திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் &nbsp;கட்சி கடுமையாக எதிர்க்கிறது. பீகார் தேர்த லில் பல முறைகேடுகள் செய்யப்பட்டுள்ளது. &nbsp;குறிப்பாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு என்ற பெயரில் பெண்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கியது மிகபெரிய முறைகேடு. பாஜக அதிகாரத்தை காப் பாற்றி கொள்வதற்காக எந்த &nbsp;குற்றச்செயலையும் செய் யும் என்பதற்கு இதுவும் சாட்சி. தேர்தல் ஆணையம் அமைக்க பிரதமர், எதிர்க் கட்சி தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட கமிட்டி &nbsp;இருந்ததை மாற்றி, உச்சநீதிமன்ற நீதிபதியை &nbsp;நீக்கி ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை பிரத மர் மோடி நியமனம் செய்துள்ளார். இது ஜன நாயக விரோதம். திருப்பூரில் நிலவும் குப்பை &nbsp;பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் &nbsp;தீர்வு காண வேண்டும் என தமிழக முதல்வ ரிடம் வலியுறித்தியுள்ளேன். நடவடிக்கை &nbsp;எடுக்காவிட்டால் மக்களுடன் கம்யூனிஸ்ட் &nbsp;கட்சி போராடும். மேலும், இப்பிரச்சனைக்கு &nbsp;அறிவியல் பூர்வ தீர்வு காண அரசு முயற்சிக்க &nbsp;வேண்டும் என வலியுறுத்துவதாக தெரிவித் தார். இந்நிகழ்வின் போது இந்திய கம்யூனிஸ்ட் &nbsp;கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ரவி, இசாக், துணை மேயர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.