தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எஸ்ஐஆர் குளறுபடிகள்!

12 Nov 2025, 3:20 pm
நாளுக்கு நாள் அதிகரிக்கும் எஸ்ஐஆர் குளறுபடிகள்!

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எஸ்ஐஆர் குளறுபடிகள்!

திணறும் பிஎல்ஓக்கள்; அச்சத்தில் வாக்காளர்கள்

கோயம்புத்தூர், நவ. 12 - வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மாநிலம் முழுவதுமே பெரும் குளறுபடி களுக்கு உள்ளாகி இருக்கிறது. இது  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் வருகிறது. குறிப்பாக, கள அளவில் பிஎல்ஓ (Booth Level Officer) நியமனம் மற்றும் படி வங்கள் விநியோகிப்பதில் ஏற் படும் குளறுபடிகள் காரண மாகப் பொதுமக்கள் மாநிலம் முழுவதுமே பெரும் சிரமங்களை எதிர்கொள்வது கள நிலவரங்கள் மூலம் அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.

கோவை மாநகராட்சி கோவை மாநகராட்சியை

எடுத்துக் கொண்டால்​ கிழக்கு மண்டலம், 59-வது வார்டு, எஸ்ஐ எச்எஸ் காலனி பகுதியில் உள்ள 210-ஆவது பாகத்தில், மொத்த முள்ள 1320 வாக்காளர்களில், பிஎல்ஓ அமலா ஜெனிதா என்பவர்,  400 வாக்காளர்களுக்கு மட்டுமே  தேர்தல் ஆணைய வழிகாட்டுத லின்படி இரண்டு படிவங் களை (ஒரு படிவம் வாக்காள ருக்கும், மற்றொன்று அலுவலகப் பயன்பாட்டிற்கும்) வழங்கியுள் ளார். ஆனால், அடுத்த 401 முதல் 750 வரையிலான 350 வாக்காளர் களுக்கு, படிவம் வரவில்லை எனக் கூறி ஒரு படிவத்தை மட்டுமே வழங்கியுள்ளார். இதனை பூர்த்தி செய்யுங்கள் பின்னர் வந்து இன் னொரு படிவத்தை தருகிறோம் என தெரிவித்துள்ளனர். ​இதேபோல், 59-வது வார்டின் 209-ஆவது பாகத்தில் உள்ள பிஎல்ஓ  ஜானகி குணவதி என்பவர், வாக்கா ளர்களுக்கு ஒரு படிவத்தை மட்டுமே வழங்கியுள்ளார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த அருணகிரி என்பவர் கூறுகையில்,​ தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு தலின்படி, பிஎல்ஓக்கள் வாக்கா ளர்களுக்கு இரண்டு பிரதிகள் வழங்க வேண்டும். ஒரு பிரதியை அலுவலகப் பதிவேட்டிற்காக வைத்துக்கொண்டு, மற்றொரு பிரதியை (ஒப்புகைச் சீட்டு) வாக்கா ளருக்கு ஆதாரமாக வழங்க வேண்டும். ஒரு படிவம் மட்டும் கொடுக்கும்போது, தான் வழங்கிய தகவலுக்கான எந்த ஆதாரமும் வாக்காளரிடம் இருப்பதில்லை. ​படிவம் வரவில்லை எனக் கூறி, தற்போது ஒரு படிவம் மட்டும்  கொடுக்கப்பட்டு, ‘பின்னர் கொடுப் போம்’ என்று கூறுவது நடைமுறை யில் சாத்தியமற்றது. வாக்காளர் கள் மீண்டும் மீண்டும் அலுவலகத் திற்கோ அல்லது பிஎல்ஓ-வையோ தொடர்புகொள்வது என்பது அதிக கால விரயம் மற்றும் தேவையற்ற அலைச்சலைக் கொடுக்கும் என்றார். ​மேற்படி ஒரே வார்டில் நடை பெற்ற இரண்டு சம்பவங்கள், அதிகாரிகளுக்கே போதிய பயிற்சிவழங்கப்படவில்லை என்பதை உறுதி செய்தது

​கள அளவில் குழப்பமும், நடைமுறைச் சிக்கல்களும்

​நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதி களில் வாக்காளர் எஸ்ஐஆர் படிவங் களை விநியோகிக்கும் பணியில் உள்ளூர் அங்கன்வாடி ஊழியர்கள், பள்ளி ஆசிரியர்கள், நகராட்சி ஊழி யர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு உரிய பயிற்சி இல்லாததால் பொதுமக்கள் மத்தியில் குழப்பங்கள் அதிகரித்துள்ளன. இதுபற்றி நாமக்கல்லைச் சேர்ந்த ​மேகலா என்பவர் கூறுகையில்,  “கண வரை இழந்து தனியே வசிக்கும் எனக்கு இன்னமும் படிவம் வரவில்லை, ஆனால் வெளியூரில் வசிக்கும் என் மகன்களுக்கு படிவம் வந்துள்ளது. எழுதப் படிக்கத் தெரியாத நிலை யில், இந்த படிவத்தை வாங்கி வைத்து  என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறேன். முன்பு பூத் ஸ்லிப் வைத்து எளிமையாக வாக்களித்தேன். இதுவரையிலும் கேள்விப்படாத இந்த  நடைமுறை குழப்பத்தை அளிக்கிறது” என்று கூறினார். ​

வாக்குரிமை உறுதிசெய்யப்படுவது கேள்விக்குறியே

மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந் தவரும், முன்னாள் மருந்து விற்பனை பிரதிநிதியுமான ​எச். ஸ்ரீராம் என்பவர் கூறுகையில், “வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு வந்த அலுவலர் கொடுத்த படிவத்தில், முந்தைய வாக்காளர் பட்டியலில் உள்ள விவ ரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதற்கான வாக்காளர் பட்டியல் என்னிடம் இல்லை. இணையத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்கின்றனர். ஆனால், அதனைப் பெறுவது சிரமமாக உள்ளது. படிக்காதவர்கள் எப்படிப் பூர்த்தி செய்ய முடியும்? அலுவலர் களுக்கே குழப்பமாகத்தான் உள்ளது” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார். செந்தில்குமார் (காளான் விற்பனை யாளர், மாணிக்கம்பாளையம் - ஈரோடு மேற்கு தொகுதி) கூறுகை யில், “நான் வியாபார விஷயமாக ஊர்  ஊராகச் சென்று விடுவதால், அலுவலர் கள் வந்தபோது வீட்டில் இல்லை. பள்ளி  சென்ற குழந்தைகள் மட்டுமே இருந்த தால், அவர்களிடம் எந்த விவரமும் பெற முடியாமல் சென்றுள்ளனர். அடுத்து எப்போது வருவார்கள், நான் வீட்டில் இருப்பேனா என்பது தெரியவில்லை. எங்கள் வாக்குரிமை உறுதி செய்யப் படுவதற்கான எந்த உத்தரவாதமும் இருப்பதாகத் தெரியவில்லை,” என்று அச்சம் தெரிவித்தார். ​கால அவகாசக் குறைபாடு, படிவங்களை நிரப்புவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், மற்றும் அதிகாரிகளின் தெளிவின்மை ஆகிய வை வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தையும், நம்பிக்கையின்மை யையும் ஏற்படுத்தியுள்ளது.  எனவே, தேர்தல் ஆணையம் இந்தப் பணிகளைத் தெளிவுபடுத்தி, கூடுதல் கால அவகாசம் அளித்து, பொது மக்களின் அடிப்படை வாக்குரிமை பாதிக்காதவாறு செயல்பட வேண்டும் என்பதே மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

வட்டாட்சியர் அலுவலகங்களிலேயே வாக்காளர் பட்டியல் இல்லாத அவலம்!

திண்டுக்கல் பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் தங்கள் வாக்குகளை உறுதிப்படுத்த முடியவில்லை.  வாக்காளர் பட்டியல் 2002 ஆம் ஆண்டிலிருந்து இணையத்தில் இருப்பதாக கூறப்பட்டாலும், எந்த அலுவலகத்திலும் அதற்கான முழுமையான அச்சுப் பிரதிகள் கிடைப்பதில்லை. சில பி.எல்.ஓ.க்களிடம் பாதி அளவிலேயே பட்டியல் உள்ளது, இதனால் பலர் தங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய முடியவில்லை. பொதுவாக ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் வாக்காளர் சரிபார்ப்பு பட்டியல் வைக்கப்படும். ஆனால் இந்த முறை எந்த அலுவலகத்திலும் அந்த பட்டியல் வைக்கப்படவில்லை. மேலும், பி.எல்.ஓ.வின் பெயர் மற்றும் அவர்களது அலைபேசி எண்களும் அறிவிக்கப்படாததால், வாக்காளர்கள் நேரடியாக தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தினசரி கூகுள் மீட் மூலமாக கூட்டங்கள் நடத்தி, “இத்தனை பேர் சேர்க்கப்பட்டார்கள், இத்தனை பேர் நீக்கப்பட்டார்கள்” என்று தெரிவிக்கின்றனர். ஆனால் யாருடைய பெயர்கள் நீக்கப்பட்டன, யாருடைய பெயர்கள் சேர்க்கப்பட்டன என்பது குறித்து தெளிவான தகவல் வழங்கப்படவில்லை. பிஎல்ஓ-க்கள் முறையாக வீடுகளுக்குச் சென்று படிவங்கள் வழங்கப்படாவிட்டால், அவ்வாறு படிவங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கும், அவர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயமும் உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.