திருக்கடையூர் சிபிஎம் அலுவலகத்தில் எஸ்ஐஆர் உதவி மையம் திறப்பு
16 Nov 2025, 3:30 pm
<p><strong>திருக்கடையூர் சிபிஎம் அலுவலகத்தில் எஸ்ஐஆர் உதவி மையம் திறப்பு</strong></p>
<p>மயிலாடுதுறை, நவ.16- தமிழ்நாடு முழுவதும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் குழப்பமின்றியும், எவ்வித தவறுதலின்றியும் வாக்காளர் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு உதவிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தரங்கம்பாடி வட்டம், திருக்கடையூர் மெயின்ரோட்டில் அமைந்துள்ள ஒன்றியக் குழு அலுவலகமான ஏ.கே.ஜி நினைவகத்தில் எஸ்ஐஆர் உதவி மையம், வெள்ளியன்று திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒன்றியச் செயலாளர் ஏ. ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உதவி மையத்தை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன் திறந்து வைத்து பணிகளை துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. குணசுந்தரி, அம்மையப்பன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
