எஸ்ஐஆர் (SIR) குளறுபடி - மக்கள் அச்சம்!
15 Nov 2025, 4:09 pm
<p><strong>எஸ்ஐஆர் (SIR) குளறுபடி - மக்கள் அச்சம்!</strong></p>
<p>தமிழகத்தில் தற்போது தீவிர மாக நடந்து வரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி யான எஸ்ஐஆர் நடைமுறையில் பல்வேறு குளறுபடிகளும், குழப் பங்களும் நிலவுவதால், பொது மக்கள் மத்தியில் வாக்குரிமை மற் றும் குடியுரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. குறுகிய காலக்கெடு மற்றும் சர்ச்சைக்குரிய கேள்விகள் குறித்து மக்கள் தங்கள் கவலைகளைப் பகிர்ந்துள்ளனர். கால அவகாசம் போதாது: கோரிக்கை தள்ளி வைப்பு! இந்த எஸ்ஐஆர் கணக் கெடுப்பு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்யப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், நவம் பர் 4 முதல் டிசம்பர் 4 வரையிலான ஒரு மாத காலக்கெடு மிகவும் குறைவு என ஈரோட்டைச் சேர்ந்த பைஜுர் ரஹ்மான் தெரிவித்துள் ளார். 2026 சட்டசபைத் தேர்த லுக்கு முன்னதாக இவ்வளவு குறு கிய காலத்தில் இதை நிறைவாக செய்து முடிக்க முடியாது என்றும், தமிழகத்தின் மதச்சார்பற்ற கட்சி கள் கோரியதைப் போல, தேர்தல் முடிந்த பிறகு இந்த பணியை நடத்தி னால் சிறப்பாக இருக்கும் என் றார். சர்ச்சைக்குரிய கேள்விகளும், குடியுரிமை அச்சமும் ஈரோடு மருத்துவர் முகமது பைசல் பேசுகையில், இந்த படி வத்தை நிரப்புவதில் பயமில்லை என்றாலும், சர்ச்சைக்குரிய கேள்விகள் அச்சத்தை ஏற்படுத்து வதாகவும், இதற்குத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணை யம் செய்ய வேண்டும் என்றும் கோரினார். மடத்துக்குளத்தைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி, தனக்குத் திருமண மாகி 30 ஆண்டுகள் ஆன நிலை யில், 2002-ஆம் ஆண்டு வாக்க ளித்த விபரங்களைக் கொடுப்பது சாத்தியமில்லை என்றும், தனது தாய் மாமா வீட்டில் வளர்ந்ததால் விண்ணப்பத்தில் உள்ள இரண்டு காலங்களை நிரப்புவது மிகவும் கடி னம் என்றும் கவலை தெரிவித் தார். பீகாரில் 65 லட்சம் வாக்காளர் கள் நீக்கப்பட்ட நிலையில், தமிழகத்திலும் சிறுபான்மையி னர், பழங்குடியினர், பட்டியலின மக்கள் குடியுரிமையை இழந்து விடுவார்களோ என்ற அச்சம் நில வுவதாகவும், வாக்காளர் பட்டிய லில் பெயர் சேர்க்கவேண்டு மானால் ஏற்கலாம், ஆனால் குடி யுரிமையைத் தீர்மானிப்பதாக இருந்தால் ஏற்க முடியாது என்றும் பைஜுர் ரஹ்மான் அச்சம் தெரி வித்தார். சாதாரண மக்களுக்கு சாத்தியமற்ற நிபந்தனைகள் கோவை, மலுமிச்சம்பட்டி யைச் சேர்ந்த சிவராஜ் கூறுகை யில், படிவங்களை பூர்த்தி செய்வ தில் பல்வேறு குழப்பங்கள் நீடிப்ப தாகவும், 2002 விபரங்கள் குறித்து யாரிடம் கேட்பது என்று தெரிய வில்லை என்றும் தெரிவித்தார். விவ சாயிகள், கூலித் தொழிலாளர்கள் போன்ற சாதாரண மக்களுக்கு இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யத் தெரியாது என்றும், படி வங்களை பூர்த்தி செய்ய தேர் தல் ஆணையமே ஒரு நபரைப் பணி யமர்த்த வேண்டும் என்றும் அவர் கோரினார். மேலும், இணையத்தில் தேடி னால் ஒரே பெயரில் பல வாக்குச் சாவடிகள் (பூத்) வருவதால், படித்த வர்கள், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே விப ரங்களைப் பூர்த்தி செய்ய முடியும் என்றும், இந்த நிபந்தனைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்துகின்றனர். ஒரே குடும்பத்தின் வாக்குகள் பல வார்டுகளுக்கு மாற்றம் பொள்ளாச்சி, கோமங்கலம் புதூர் ஊராட்சியில், ஒரே வீட்டில் வசிக்கும் கண்ணன், அவரது மனைவி மற்றும் தாயாரின் வாக்கு கள் வெவ்வேறு வார்டுகளுக்கு மாற் றப்பட்டுள்ளதாக கண்ணன் என்ப வர் புகார் தெரிவித்துள்ளார். இது போன்று பலரது வாக்குகளும் மாற் றப்பட்டு குழப்பம் ஏற்படுத்தப்பட் டுள்ளதாகவும், இதனைத் தேர்தல் ஆணையம் உடனடியாகச் சரி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உடுமலையைச் சேர்ந்த புவ னேஸ்வரி, நடுநிலை தவறிய தேர் தல் ஆணையம், தமிழகத்திலும் சதியை முறியடிக்காவிட்டால் பல ஆண்டுகள் பின்னுக்குச் செல்லும் நிலை ஏற்படும் என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்தார். பிஎல்ஓ-க்களுக்கு பயிற்சி தேவை: உடல்நலக் குறைவும் வீடு வீடாகச் செல்லும் பிஎல்ஓ (பூத் லெவல் அதிகாரிகள்)-களுக்கே இந்த விண்ணப்பங் களை பூர்த்தி செய்யத் தெரிவ தில்லை என்றும், அவர்களுக்கு முதலில் பயிற்சி அளிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். நாமக்கல், திருச்செங்கோடு நகராட்சியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் துர்க்கா மூர்த்தி, பிஎல்ஓ ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார். அதிகப் படியான பணியால் பிஎல்ஓ-க்கள் உடல்நலக் குறைவுக்கு ஆளா கின்றனர். பிஎல்ஓ ஊழியர் ஒருவர், பணிச் சுமையை குறைக்க அரசியல் கட்சியினர் உதவினாலும், வாக்கா ளர் பட்டியலில் இருந்து நீக்கி விடு வோமோ என்ற அச்சத்தில் மற்ற கட்சியினர் பணியை உற்று கவனிப் பதாகவும், நடுநிலையாக உள்ள வாக்காளர்கள் குறித்து எந்தக் கட்சியினரும் கண்டுகொள்வ தில்லை என்றும் தனது கவ லையை பதிவு செய்தார். குறுகிய காலத்தில், குழப்ப மான கேள்விகள் மற்றும் குளறுபடி களுடன் நடக்கும் இந்த எஸ்ஐஆர் பணியை தள்ளி வைக்க வேண் டும் என்பதே பெரும்பாலான மக்க ளின் கோரிக்கையாக உள்ளது. -நமது நிருபர்கள்</p>
