தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சோபர்ஸ் - ஓர் அழியா ஒளி விளக்கு!

19 Jul 2026, 10:01 pm
சோபர்ஸ் - ஓர் அழியா ஒளி விளக்கு!

சோபர்ஸ் - ஓர் அழியா ஒளி விளக்கு!

கிரிக்கெட் என்னும் சது ரங்க மைதா னத்தில் பேட்டை யும் பந்தையும் தன் விரல் அசைவுகளால் கவிதையாக மாற்றிய ஒரு மகாகவி. தனது 89ஆவது வய தில் வரலாற்றின் பக்கங்களில் நிரந்தர மாகக் குடியேறியுள்ளார். அவர்தான் மேற்கிந்திய தீவுகளின் அசைக்க முடி யாத விடிவெள்ளி, சர் கார்பீல்ட் சோபர்ஸ்.

வறுமையில் உதித்த விடிவெள்ளி பார்படாஸின் கடற்கரை காற்றில், 1936ஆம் ஆண்டு ஷாமோன்ட் - தெல்மா சோபர்ஸ் தம்பதியருக்கு ஆறு குழந்தைகளில் ஐந்தாவதாக பிறந்த போது, சோபர்ஸிடம் வறுமையைத் தவிர வேறு எதுவும் இருக்கவில்லை. 1942ஆம் ஆண்டின் துவக்கத்தில், ஜெர்மன் யு-போட் தாக்குதலில் ஒரு கப்பல் மூழ்கியது, தந்தையை கடலுக்குப் பலிகொடுத்தபோது சோபர்ஸுக்கு வெறும் 5 வயதுதான்.

தாயின் கண்ணீரை மட்டுமே துணையாகக் கொண்டு வளர்ந்த சிறுவன் அவர். பிறக்கும்போதே 2 கைகளிலும் தலா ஒரு விரல் வீதம் கூடுதல் விரல்களோடு பிறந்த அவரிடம் முறையான பேட் இல்லை, பந்தும் இல்லை. ஆனால், லட்சியம் இருந்தது.

தென்னை மர மட்டைகளையும், தார் துணிகளையும் கொண்டு அவர் தெருக்களில் ஆடிய ஆட்டம், பிற்காலத்தில் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் என்று அன்று யாரும் கணித்திருக்கவில்லை. மைதானத்தில் விதைக்கப்பட்ட புரட்சி 1953ஆம் ஆண்டு தனது 16ஆவது வயதில் முதல் தரப் போட்டியில் அறிமுகமான சோபர்ஸ், அடுத்த ஆண்டே மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்காக டெஸ்ட் அரங்கேற்றம் செய்தார்.

ஆரம்பத்தில் ஒரு பந்து வீச்சாளராகக் களமிறங்கிய அவர், விரை வில் பேட்டிங் வரிசையில் உயர்த்தப் பட்டு, கிரிக்கெட் உலகம் கண்ட மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக உருவெடுத் தார். 1958-இல் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தையே ஆட்ட மிழக்காமல் 365 ரன்களாக மாற்றி, புதிய உலக சாதனையைப் படைத்தார்.

1994இல் பிரையன் லாரா 375 ரன்கள் குவிக்கும் வரை, அதாவது 36 ஆண்டுகள் அச்சாதனை அசைக்க முடியாமல் நின்றது. 1968-ல் முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த முதல் வீரர் என்ற அழியாத பெருமையையும் அவரே பெற்றார். 1965-இல் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டனான சோபர்ஸ், 1972 வரை அணியை வழிநடத்தி னார். 1970இல் இங்கிலாந்து சுற்றுப்பய ணத்தின்போது உலக அணிக்கும் கேப்டனாகப் பொறுப்பேற்றார்.

மொத்தத்தில், மேற்கு இந்தியத் தீவுகளுக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8,032 ரன்கள் குவித்தார். 235 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 383 முதல் தரப் போட்டிகளில் 28,000-க்கும் மேற்பட்ட ரன்களை யும், 1,000-க்கும் மேற்பட்ட விக்கெட்டு களையும் குவித்த அவர், தொழில் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் நாட்டிங் ஹாம்ஷைர் அணிகளுக்காகவும் விளையாடினார்.

விக்கெட் கீப்பிங் தவிர கிரிக்கெட்டின் அனைத்துத் துறைகளிலும் அசாத்தி யமாகச் செயல்பட்ட அவரை, கிரிக்கெட் டின் பிதாமகன் ‘டான் பிராட்மேன்’, தான் கண்ட மைதான அற்புதங்களிலேயே மிகச் சிறந்த ஆல்-ரவுண்டர் என்று மனதாரப் பாராட்டியது வெறும் புகழுரை யல்ல; அது உண்மையின் அங்கீகாரம்.

கரீபியன் சாம்ராஜ்யத்தின் அசைக்க முடியாத தூண் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு சோபர்ஸ் வெறும் வீரராக மட்டும் இருக்கவில்லை; அந்த அணியின் ஆன்மாவாக விளங்கினார்.

தனித்தனி தீவுகளாகக் கிடந்த வீரர்களை ஒன்றாக இணைத்து, உலக அரங்கில் கரீபியன் மக்களுக்கான சுயமரியாதையையும் ஒற்றுமையையும் விதைத்து, வெல்ல முடியாத ஒரு ‘வெஸ்ட் இண்டீஸ்’ சாம்ராஜ்யத்தின் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

பேரொளியாய் நீடித்த தாக்கமும் 1974-இல் சர்வதேச கிரிக்கெட்டி லிருந்து ஓய்வு பெற்ற சோபர்ஸ், 1975-இல் நடைபெற்ற முதலாவது உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்று ஒட்டுமொத்த கரீபியன் உலகமும் ஆசைப்பட்டது. ஆனால், காயம் காரணமாக அது நிறைவேறவில்லை.

இருப்பினும், அவரது வழிகாட்டு தலில் உருவான கிளைவ் லாய்ட், விவியன் ரிச்சர்ட்ஸ், கார்டன் கிரீனிட்ஜ் போன்ற இளம் சிங்கங்கள், சோபர்ஸ் விதைத்த அந்த ஆக்ரோஷமான, பயமில்லாத கிரிக்கெட் தத்துவத்தை உள்வாங்கி, 1975 மற்றும் 1979 உலகக் கோப்பைகளை வென்று அவ ரது கனவை நனவாக்கினர்.

காலத்தால் அழியா அடையாளம் ஜூலை 17, 2026 அன்று, தனது 89ஆவது வயதில் அவர் தன் இறுதி இன்னிங்ஸை முடித்துக்கொண்டு விடைபெற்றுவிட்டார்.

ஆனால், லார்ட்ஸ் மைதானத்தின் புற்களிலும், பார்படாஸ் கடற்கரையின் காற்றிலும் அவரது ஆட்டத்தின் வேகம் எப்போதும் எதி ரொலித்துக் கொண்டே இருக்கும். மைதானங்களின் மகாகவி சர் கார்பீல்ட் சோபர்ஸ் அவர்களுக்கு உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கண்ணீர் அஞ்சலி! உங்கள் ஆட்டம் என்றும் எங்கள் நினைவுகளில் வாழும்! ? - - சி.ஸ்ரீராமுலு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.