தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோவில் வாசலில் கேட்பாரற்று கிடந்த எஸ்ஐஆர் படிவங்கள்!

16 Nov 2025, 3:30 pm
கோவில் வாசலில் கேட்பாரற்று கிடந்த எஸ்ஐஆர் படிவங்கள்!
<p><strong>கோவில் வாசலில் கேட்பாரற்று கிடந்த எஸ்ஐஆர் படிவங்கள்!</strong></p> <p>நாமக்கல், நவ.16- குமாரமங்கலம் பகுதியிலுள்ள கோவில் வாசலில், வாக்காளர்கள் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற் கான படிவங்கள் கேட்பாரற்று கிடந் ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் தயா ரிக்க வீடு வீடாகச் சென்று படிவங் கள் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய் யப்பட்ட படிவங்கள் திருப்பி வாங்கி &nbsp;கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்நி லையில், சனியன்று மாலை நாமக் கல் மாவட்டம், குமாரமங்கலம் நாடார் தெரு செல்வ விநாயகர் கோவிலுக்குள் வாக்காளர்களிடம் சென்று சேர வேண்டிய படிவங்கள் சிதறி கிடப்பதாகவும், உரிய அலு வலர்கள் யார் இன்றி கேட்பாரற்ற நிலையில் கிடப்பதாகவும் அங்கி ருந்த பொதுமக்கள் செய்தியாளர் களுக்கு தகவல் தெரிவித்தனர். இத னையடுத்து நேரில் சென்று பார்த்த போது, ஒரு மேசையின் மேல் வாக் காளர்களுக்கு சென்று சேர வேண் டிய படிவங்கள் பிஎல்ஓ குறிப்பேடு புத்தகம் ஒன்று ஒரு மஞ்சள் பை என குவியலாக கிடந்தது. இதுகுறித்து அதே பகுதியைச் &nbsp;சேர்ந்த முத்து மற்றும் 87.கவுண்டம் பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜன் ஆகியோர் கூறுகை யில், வாக்காளர்களுக்கு சேர வேண் டிய திருத்தப்பட்டியல் விண்ணப் பங்கள் சுமார் 300 படிவங்கள் கோவி லுக்குள் கேட்பாரற்று கிடந்தது. இரவு 7 மணி வரை யாரும் வர வில்லை. பெரும் மழையோ காற்றோ &nbsp;அல்லது வேறு ஏதாவது அசம்பாவி தமோ ஏற்பட்டு படிவங்கள் பயன்ப டுத்த முடியாத நிலைக்குச் சென்றி ருந்தால், இந்த வாக்காளர்களின் கதி என்ன என்பது தெரியாத நிலை ஏற்பட்டிருக்கும். பொறுப்பற்ற நிலையில் படிவங்களை விட்டுச் சென்ற பிஎல்ஓ மீது மாவட்ட நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும், என்றனர். அப்போது திடீரென குமாரமங் கலம் அங்கன்வாடி பணியாளர் வனிதா அங்கு வந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத் திற்கு சென்றதாகவும், பையை &nbsp;பாதுகாப்பாகத் தான் வைத்திருந் தேன் எனவும், யாரோ எடுத்து கீழே &nbsp;கொட்டியுள்ளார்கள் எனவும் கூறிய படி, கீழே கிடந்த படிவங்களை &nbsp;எடுத்து பைக்குள் போட்டுக் கொண்டு சென்று விட்டார். இதுகுறித்து தக வல் அறிந்த எலச்சிபாளையம் வரு வாய் ஆய்வாளர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் சுபா தேவி ஆகி யோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். வருவாய் கோட் டாட்சியர் அலுவலகத்தில் நடந்த &nbsp;கூட்டத்திற்கு அவசரமாக செல்ல &nbsp;வேண்டிய இருந்ததால் பாதுகாப் புக்கு ஒரு பெண்ணை நிற்க வைத்து விட்டு சென்றதாகவும், யாரோ சிலர் பையில் இருந்த படிவங்களை பெஞ்சின் மேல் கொட்டி வைத்தி ருப்பதாக அதிகாரிகள் வட்டாரத் தில் தெரிவித்தனர். பணத்தைவிட, விலை மதிப்பற் றதாக கருதப்படும் வாக்காளராக தங்களை இணைத்துக் கொள்வ தன் மூலம் தான் தாங்கள் ஒரு இந் திய குடிமகன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கும் பொதுமக்கள் பயன்படுத்த வேண் டிய படிவங்களை பொறுப்பெற்ற தன்மையில் கோவில் வாசப்படி யில் விட்டுச் செல்லப்பட்ட சம்பவம் வாக்காளர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.