முந்தய பக்கம்

எஸ்ஐஆர் படிவங்கள்  சந்தேகங்களுக்கு உதவி  எண்கள் அறிவிப்பு

19 Nov 2025, 3:33 pm
எஸ்ஐஆர் படிவங்கள்  சந்தேகங்களுக்கு உதவி  எண்கள் அறிவிப்பு
<p><strong>எஸ்ஐஆர் படிவங்கள் &nbsp;சந்தேகங்களுக்கு உதவி &nbsp;எண்கள் அறிவிப்பு</strong></p> <p>சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் &nbsp;சிறப்பு தீவிரதிருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வரு கின்றன. இந்தப் பணிக்காக தமிழக தேர்தல் ஆணையம் &nbsp;சுமார் 77 ஆயிரம் அரசுப் பணியாளர்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமித்துள்ளது. அவர்கள் &nbsp;கணக்கெடுப்பு படிவத்தை வீடு, வீடாகச் சென்று வாக்கா ளர்களுக்கு வழங்கி வருகின்றனர். வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கணக்கீட்டுப் படிவத்தைப் பூர்த்தி செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ள தாக வாக்காளர்கள் மத்தியிலிருந்து குற்றச்சாட்டுக்கள் &nbsp;எழுந்து வருகின்றன. எனவே, கணக்கீட்டுப் படிவங்களில் &nbsp;வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காண வும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் பெயர்கள் 2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்ற விவரத்தைக் கண்டறியவும் வாக்காளர் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த &nbsp;படிவங்கள் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற உதவி &nbsp;எண்ணைத் தொடர்பு கொள்ள மாநில தேர்தல் ஆணை யம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 9444123456 என்ற எண்ணில், &nbsp;&lsquo;வாட்ஸ் ஆப்&rsquo; மூலம் தொடர்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்டறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram