தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர் : எல்லை மீறும் தேர்தல் ஆணையம் முன்னாள் கடற்படை தளபதிக்கும் நோட்டீஸ்

12 Jan 2026, 6:02 pm
எஸ்ஐஆர் : எல்லை மீறும் தேர்தல் ஆணையம் முன்னாள் கடற்படை தளபதிக்கும் நோட்டீஸ்
<p><strong>எஸ்ஐஆர் : எல்லை மீறும் தேர்தல் ஆணையம் முன்னாள் கடற்படை தளபதிக்கும் நோட்டீஸ்</strong></p> <p>பனாஜி பீகார் மாநிலத்தை தொ டர்ந்து தமிழ்நாடு, கேர ளம், கோவா என 12 மாநிலங்களில் (யூனியன் பிரதேசத்தையும் சேர்த்து) வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்ஐஆர்) மேற் கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டுள்ளன. கோவா மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிக்கு பிறகு, சுமார் 1 லட் சத்திற்கும் அதிகமான பெயர் கள் (8.44%) நீக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. மேலும் வரைவுப் பட்டியலில் இடம் பெற்ற பலருக்கும் வாக்குரி மையை நிரூபிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில், கோவா வில் வசித்து வரும் இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியும், &lsquo;வீர் சக்ரா&rsquo; விருது பெற்றவருமான அட்மிரல் அருண் பிரகாஷ் மற்றும் அவரது மனைவிக்கு இந்தியத் தேர்தல் ஆணை யம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. தங்களை வாக்கா ளர்களாக உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு இருவ ருக்கும் தேர்தல் ஆணையம் உத்தரவு &nbsp;பிறப்பித்துள்ளது. &nbsp;கடற்படையில் இருந்து ஓய்வுக்குப் பிறகு கோவா வில் குடியேறிய அட்மிரல் அருண் பிரகாஷ், &lsquo;வரைபட மாக்கப்படாதவர் (unma pped)&rsquo; என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அருண் பிர காஷ் கூறுகையில், &ldquo;நானும் என் மனைவியும் வெவ் வேறு தேதிகளில், 18 கி.மீ., தொலைவில் உள்ள அலுவ லகத்திற்கு நேரில் வருமாறு தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. நான் கடற் படை அட்மிரல். இருந்தாலும் எங்களுக்கு எந்த சிறப்புச் சலுகையும் தேவையில்லை; கேட்கவும் இல்லை. ஆனால் தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏற்கெ னவே எங்களது பெயர்கள் இருந்தும் இத்தகைய நோட்டீஸ் அனுப்பப்பட்டி ருப்பது குழப்பமாக உள்ளது&rdquo; என அவர் குற்றம் சாட்டினார். &nbsp;தேர்தல் ஆணையம் மழுப்பல் கடந்த 2002ஆம் ஆண்டு நடைபெற்ற வாக்காளர் திருத்தத்தின் போது அருண் பிரகாஷ் மற்றும் அவரது மனைவியின் பெயர் விவ ரங்கள் இல்லாததாலும், படிவத்தில் சில விவரங் கள் பூர்த்தி செய்யப்படா ததாலும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது என தேர்தல் ஆணைய அதிகாரி கள் மழுப்பலாகத் தெரி வித்துள்ளனர். அருண் பிரகாஷ் மட்டு மின்றி தெற்கு கோவா எம்.பி., யும், ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியுமான விரியாட் டோ பெர்னாண்டஸுக்கும் இதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.