குடியிருப்பு வாசிகளுக்கு தெரியாமல் அவிநாசியில் எஸ்.ஐ.ஆர். முகாம்
15 Nov 2025, 4:09 pm
<p><strong>குடியிருப்பு வாசிகளுக்கு தெரியாமல் அவிநாசியில் எஸ்.ஐ.ஆர். முகாம்</strong></p>
<p>அவிநாசி, நவ.15- அவிநாசி அருகே எஸ்.ஐ.ஆர். பணிகள் குறித்த முகாம் நடைபெறுவது வருவாய் அலுவலர் ஆய்வு மேற்கொண்ட பிறகே அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு தெரியவந்துள் ளது. அவிநாசி வட்டத்தில் புனித தோமையார் பெண்கள் மேல்நி லைப்பள்ளி, அவிநாசி கிராம நிர்வாக அலுவலகம் ஆகிய இடங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகளை திருப்பூர் மாவட்ட வரு வாய் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமு றைகளை பின்பற்றி எஸ்.ஐ.ஆர். பணிகளை மேற்கொள்ளு மாறு அறிவுறுத்தினார். இங்கு முகாம் நடைபெறுவது மதியம் வரை பள்ளி அருகே உள்ள குடியிருப்பு வாசிகளுக்கே தெரி யவில்லை. இது போன்ற முகாம்கள் நடைபெறுவது குறித்து முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
