தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எஸ்ஐஆர்: தொடரும் விசாரணைகள்

23 Jan 2026, 5:49 pm
எஸ்ஐஆர்: தொடரும் விசாரணைகள்
<p><strong>எஸ்ஐஆர்: தொடரும் விசாரணைகள்</strong></p> <p>ஈரோடு, ஜன.23- வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், தொடரும் விசாரணைகள் சந்தே கத்தை உருவாக்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட் டில் ஒரு சில மாதங்களில் நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலையொட்டி, வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி களை அறிவித்து, கடந்த நவ.4 ஆம் தேதி &nbsp;பணி தொடங்கியது. இதற்கென நியமிக்கப் பட்ட பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று தேவையான விபரங்களைக் கேட்டு எழுதிச் &nbsp;சென்றனர். ஆனால், இந்த முறை கணக்கீட்டு படிவங்கள் கொடுத்து அதில் கேட்கப்பட் டுள்ள விபரங்களை ஒவ்வொரு வாக்காள ரும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என் பது கட்டாயமாக்கப்பட்டது. அதில் வாக்கா ளரின் பிறந்த தேதி, செல்போன் எண், 2002 &nbsp;வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற சட்ட மன்ற தொகுதி எண், பெயர், பாகம் எண், &nbsp;வரிசை எண் மற்றும் வாக்காளர் அட்டை எண் ஆகிய விபரங்கள் கேட்கப்பட்டிருந்தது. அத்துடன் உறவினர் என்ற பெயரில் வாக்கா ளரின் தந்தை, தாய், மனைவி உள்ளிட்ட வர்களின் விபரங்களையும் அதில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விபரங்கள் அலுவலர் நிலையிலி ருந்த பலருக்கும் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியது. அப்பணியில் ஈடுபட்ட பிஎல் ஓக்களுக்கும் உரிய விபரங்கள் தெரிய வில்லை. இந்நிலையில் ஒரு வழியாக இணைய தளத்தில் தேடி, பலரிடம் உதவி &nbsp;பெற்று படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர். வாடகை வீடுகளில் குடியிருந்த வர்கள், இடம் மாறி சென்றவர்கள் படிவம் பெற முடியவில்லை, ஆன்லைனில் படிவங் கள் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டது. இப் பணி தொடங்கப்பட்ட போது மாவட்டத்தில் 19 லட்சத்து 97 ஆயிரத்து 189 வாக்காளர்கள் இருந்தனர். புதிய வரைவு பட்டியலில் 16.30 &nbsp;விழுக்காடு வாக்காளர் பெயர்கள் இடம் பெற வில்லை. தற்போது 16லட்சத்து 71 ஆயிரத்து 760 வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றுள் ளனர். இவர்கள் இறந்தவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள், வேறு முகவரிக்கு குடி பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு கொண்ட வர்கள் என அறிவிக்கப்பட்டனர். இந்த இனங்களில் தேவையெனில் படி வம் 6, உறுதிமொழி படிவம் மற்றும் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள 13 ஆவணங்களில் ஒன்றை சமர்பித்து தங்க ளது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். சேர்த்தல், நீக்கம், &nbsp;திருத்தம், முகவரி மாற்றம், செல் நம்பர், ஆதார் எண் இணைக்க www.voters.eci.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், வாக்காளர் உதவி செயலி மூலமும் அல்லது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலு வலர்களிடம் நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய ஆவ ணங்களுடன் திரும்ப சமர்பிக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் படிவம் 6 &nbsp;கொடுத்தவர்களிடம் விசாரணைகள் நடை பெற்றது. கடந்த பட்டியலில் ஒத்துப் போகாதா வர்கள் என்று பலர் விசாரணைக்கு அழைக் கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விசாரணைகளின் முடிவில் எத்தனை வாக்கா ளர்கள் சேர்க்கப்படுவர், நீக்கப்படுவர் என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.