முந்தய பக்கம்

‘சிப்காட் போகி’ என்ற தூய்மைப்பணி

9 Jan 2026, 3:41 pm
‘சிப்காட் போகி’ என்ற தூய்மைப்பணி
<p><strong>&lsquo;சிப்காட் போகி&rsquo; என்ற தூய்மைப்பணி</strong></p> <p>ஈரோடு, ஜன.9- பெருந்துறை சிப்காட் வளாகத்தில் &lsquo;சிப்காட் போகி&rsquo; என்ற மாபெரும் தூய்மைப்பணி நிகழ்ச்சியினை ஆட்சியர் கந்தசாமி தொடங்கி வைத்தார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் திட்ட அலுவல கத்தில், &lsquo;சிப்காட் போகி&rsquo; என்ற மாபெரும் தூய்மைப்பணி - 2026 நிகழ்ச்சியினை ஆட்சியர் ச.கந்தசாமி வெள்ளியன்று தொடங்கி வைத்தார். இதன்பின் அவர் பேசுகையில், முத லீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஒட்டுமொத்த ஈர்ப்பை யும் செயல்பாட்டுத் திறனையும் மேம்படுத்தும் வகையில், சிப்காட்டின் அனைத்துத் தொழிற்பூங்காக்களிலும் தூய்மை யான, அழகியல் மற்றும் சுகாதாரமான சூழலைப் பராமரிப்ப தில் சிப்காட் உறுதியாக உள்ளது. இந்த முயற்சிகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், சிப்காட் தனது அனைத்துத் தொழிற்பூங்காக்களிலும் &ldquo;சிப்காட் போகி&rdquo; என்ற தலைப்பில் ஒரு விரிவான மாபெரும் தூய்மைப் பணி இயக்கத்தைத் திட்டமிட்டுள்ளது. இந்த இயக்கம் வெள்ளியன்று தொடங்கி, சமத்துவப் பொங்கல் கொண் டாட்டத்துடன் இணைந்து ஜன.14 ஆம் தேதி முடிவடையும், என்றார். மேலும், பெருந்துறை வட்டத்திலுள்ள ஈங்கூர் மற்றும் பெருந்துறை கிராமங்களில் 2663 ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதுவரை 2096.09 ஏக்கர் 369 அலகுகளுக்கு ஒதுக்கப்பட்டு மற்றும் &nbsp;254 அலகுகள் தற்போது இயங்கி வருகின்றன. போகி பண்டி கையை முன்னிட்டு, பெருந்துறை தொழிற்சாலை வளாகம் முழுவதும் பயன்பாட்டு பகுதிகளான சாலை, வடிநீர் கால் வாய், உந்து நிலையம் போன்ற பகுதிகளில் தூய்மைப் பணி கள், சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் பூங்காவிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சி யில், சிப்காட் செயற்பொறியாளர் (சென்னை) திருவருள், பெருந்துறை நகர்மன்றத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram