முந்தய பக்கம்

சிப்காட் அமைக்க எதிர்ப்பு

20 Jul 2026, 11:30 pm
சிப்காட் அமைக்க எதிர்ப்பு
<p><strong>சிப்காட் அமைக்க எதிர்ப்பு</strong></p><p>நாமக்கல், ஜூலை 20- சிப்காட் திட்டத்தை கொண்டு வரக்கூடாது என வலியுறுத்தி, கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகே 485 ஏக்கரில் சிப்காட் அமைக்க முந்தைய திமுக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் சிப்காட் தொழிற்சாலை அமைந்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி சேர்ந்த விவசாய அமைப்பினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து திங்க ளன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிப்காட் அமைக்க கடந்த திமுக ஆட்சியினர் முயற்சி செய்ததை, தற்போதுள்ள தமிழக அரசு நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நூதன முறையில் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டிக்கொண்டு, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram