சாலையை மறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
11 Apr 2026, 5:30 am

சாலையை மறித்த ஒற்றை யானை: வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, ஏப். 10 - தேன்கனிக்கோட்டை வனச் சரகம் ஓசூர் - இராயக்கோட்டை நெடுஞ்சாலையில் எம்மாபுரம் வனப்பகுதியில் வெள்ளியன்று அதிகாலை புள்ளி வாரியை ஒற்றை யானை மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பெட்டமுகிலாளம் வனப்பகுதியில் வெளி வந்த யானை அதிகாலை 1 மணியளவில் புள்ளி வாரி ஓடை அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாமி ஏரி ஓட்டி உள்ள சாலையின் நடுவில் ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது. இதனால் லாரியை மேற்கொண்டு ஓட்டிச் செல்ல முடியாமல் டிரைவர் வாகனத்தை நிறுத்தினார்.

சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாகச் சாலையின் நடுவிலேயே நின்றிருந்த அந்த யானை, அதன் பிறகு தானாகவே திரும்பி காட்டிற்குள் சென்றது. இது குறித்து வனக்காவலர்கள் கூறுகையில், “இந்த யானையின் பெயர் ‘கிரி’. இது அடிக்கடி இதுபோன்ற சாலையில் குறுக்கே வருவது வழக்கம். எனவே, இப்பகுதியில் பயணிப்பவர்கள் பகல் நேரங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். தேவையற்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது” என்று அறிவுறுத்தினர்.