சிங்காரவேலரின் சிந்தனைகள்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>சிங்காரவேலரின் சிந்தனைகள்</strong></p>
<p>“உலகில் உள்ள மதங்கள் எல்லாம் மனிதரைப் பிணைக்கும் விலங்குகளே தவிர, விடுவிக்கும் வழிகள் அல்ல. மனிதர்கள் மதத்தை விட்டு வெளியேறாதவரை உண்மையான சுதந்திரத்தை உணர முடியாது.” “கடவுள், மோட்சம், நரகம் என்பவை வெறும் மனிதக் கற்பனைகளே. இவை பாமர மக்களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட சூழ்ச்சிகள்.” “அறிவியல் வளராத நாட்டில் மூடநம்பிக்கை செழித்து வளரும். மக்கள் தங்கள் கஷ்டங்களுக்கு விதியைக் காரணம் காட்டாமல், அறி வியலைக் கொண்டு இயற்கையை வெல்லப் பழக வேண்டும்.” “செல்வம் ஒரு சில ரிடம் குவிந்து கிடப்பதும், உழைக்கும் மக்கள் வறுமையில் வாடுவதும் இயற்கை நீதியல்ல. இதுவே சமூகத்தின் அத்தனை கொடுமைகளுக்கும் மூலகாரணம்.” “சாதியைக் கலப்பு மணத்தால் மட்டும் ஒழித்துவிட முடியாது. பொருளாதாரச் சமத்துவம் எப்போது ஏற்படுகிறதோ, அப்போதுதான் சாதி வேர்கள் கருகும்.” “மந்திரத்தால் மாங்காய் விழாது என்பது தெரிந்தும், இன்னும் மந்திரவாதிகளைத் தேடி ஓடுவது நமது சமூகத்தின் அறியாமையைக் காட்டுகிறது. இதைச் சட்டத்தால் ஒடுக்க வேண்டும்.” “தீண்டாமை என்பது ஒரு சமூகக் கொடுமை மட்டுமல்ல, அது ஒரு பொருளாதார ஒடுக்குமுறை. உழைக்கும் மக்களைப் பிரித்து வைத்தால்தான் சுரண்டல் எளிதாகும் என்பதே சாதியத்தின் பின்னணி.” “பொதுவுடைமைச் சமூகத்தில்தான் பெண்ணின் உழைப்பு அங்கீகரிக்கப்படும். குடும்பம் எனும் சிறையிலிருந்து பெண்கள் விடுதலை பெற்று, சமூக உற்பத்தியில் பங்கேற்க வேண்டும்.” “வெள்ளைக்கார அதிகாரிகளின் இடத்தில் இந்திய அதிகாரிகள் அமர்வது மட்டும் சுதந்திரம் அல்ல. ஏழை தொழிலாளியின் வயிற்றுக்கு சோறு கிடைப்பதே உண்மையான சுயராஜ்யம்.”</p>
